கர்நாடக எல்லையில் தேவாரம் தலைமையில் அதிரடிப்படை வேட்டை
சேலம்:
தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் வால்டர் தேவாரம் தலைமையில் தமிழக அதிரடிப்படையினர் காட்டில் கர்நாடகஎல்லைப் பகுதியை ஒட்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பா கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவே காட்டுக்குள்புகுந்து வீரப்பனைத் தேடி வருகின்றனர். இதனால் அவன் தமிழக எல்லையில் நுழைய நிறைய வாய்ப்புள்ளது.
இதனால் சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள அதிரடிப்படை முகாமில் தமிழக அதிரடிப்படை தலைவர்தேவாரம் தலைமையில் தமிழக அதிரடிப்படை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை முக்கிய ஆலோசனைநடத்தினர்.
ஆலோசனைக்குப் பிறகு நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குள் கர்நாடக எல்லையை ஒட்டிதேடுதல் வேட்டையில் இறங்கினர். நாகப்பா கடத்தலையடுத்து இந்தப் பகுதிகளில் தமிழக அதிரடிப்படை நுழையதடை விதிக்கப்பட்டிருந்தது.
திம்மம், பன்னாரி,கோபிநித்தம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப்படை வீரர்கள்தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
வீரப்பனின் சொந்த கிராமமான கோபிநத்தம் பகுதியில் வீடு வீடாக போலீஸார் சோதனை போட்டு விசாரணைநடத்தி வருகின்றனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியிலும் அதிரடிப்படை போலீஸார் அதிகஅளவில் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேவாரத்தை சந்திக்க அதிகாரி விரைவு:
வீரப்பனை பிடிப்பது குறித்து விவாதிக்க தமிழக அதிரடிப்படையின் தலைவர் தேவாரத்தை சந்திக்க கர்நாடகமுதல்வரின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு கோயம்புத்தூர் விரைந்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனைகளைக் கூட நிறுத்தியிருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications