நாகப்பா உடல் காட்டில் கிடந்தது: வீரப்பனே சுட்டுக் கொன்றான்?
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா காட்டுக்குள் பிணமாகக் கிடந்தார். அவரதுஉடலை கர்நாடக அதிரடிப் படையினர் மீட்டனர்.
அவர் கொல்லப்பட்டு 3 நாட்களாகிவிட்டதாகத் தெரிகிறது. அவரது உடலின் போஸ்ட் மார்ட்டம் இன்று நடக்கிறது.
இச் சம்பவத்தால் கர்நாடகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று முன் தினம் நள்ளிரவு வீரப்பன் அனுப்பிய கேசட்டில், வியாழக்கிழமை காலை காட்டுப் பகுதியில் தமிழக அதிரடிப்படையினர் தங்களை சுற்றி வளைத்து சுட்டதாகவும் அந்தத் தாக்குதலில் நாகப்பா காயமடைந்ததாகவும், இதனால் அவரை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டு நாங்கள் தப்பிவிட்டோம் என்றும் கூறியிருந்தான்.
மேலும் இந்தக் தாக்குதலில் நானும் சேத்துக்குளியானும் கூட காயமடைந்துவிட்டோம் என்று கூறியிருந்தான். மேலும் தாங்கள் திருப்பிச்சுட்டதில் தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கேசட்டில் வீரப்பன் கூறியிருந்தான்.
ஆனால், வீரப்பன் ரும்பலுடன் எந்தவிதமான என்கெளண்டரும் நடக்கவில்லை, வீரப்பன் கும்பலை நாங்கள் சுடவே இல்லை என தமிழகஅதிரடிப் படை கூறிவிட்டது.
இதனால் நாகப்பாவின் நிலை என்ன என்று தெரியாமல் கர்நாடகம் நேற்று முழுவதும் குழப்பத்தில் ஆழ்ந்தது. அவர் காட்டுப் பகுதியில்காயத்துடன் இருக்கலாம் என்று கருதி அவரை மீட்க ஆயிரக்கணக்கான கர்நாடக அதிரடிப்படையினரும், கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தபொது மக்களும் காட்டுக்குள் புகுந்தனர்.
அப்போது கர்நாடக காட்டுப் பகுதியான செங்கடி அருகே நாகப்பாவின் உடல் கிடந்தது. அவரது உடல் அழுகிப் போய் இருந்தது. உடல்முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு அவரது உடலை கர்நாடக அதிரடிப்படையினர் மீட்டனர்.
இதனால் நாகப்பா கொல்லப்பட்டு குறைந்தபட்சம் 3 நாட்களாவது ஆகியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. வீரப்பனிடம் இருந்து தப்பமுயன்றபோது அவரை வீரப்பனே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கொள்ளேகால் மாவட்டம் காமகெரேயில் உள்ள அவரது வீட்டிலிருந்து நாகப்பாவை வீரப்பன் கடத்திச்சென்றான். பின்னர் கொளத்தூர் மணியை தன்னிடம் தூது அனுப்புமாறு 4வது, 5வது கேசட்டில் கூறியிருந்தான் வீரப்பன்.
மேலும் 12 நாள் கெடுவும் விதித்தான். இந்தக் கெடு கடந்த 2ம் தேதி முடிவடைந்தது.
ஆனால், மணிக்கு 4 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தது. மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கெடுவை நீட்டிக்க கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அதை வீரப்பன் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இனியும் தன்னை அரசு மீட்காது என்று கருதிய நாகப்பா தப்ப முயன்றிருக்கலாம், அப்போது அவரை வீரப்பன் சுட்டுக் கொன்றிருக்கலாம்என்று தெரிகிறது.
ஆனால், அவரை தமிழக அதிரடிப்படை சுட்டதாக வீரப்பன் புரளியைக் கிளப்பி விட்டுள்ளான்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications