குண்டர் சட்டத்தில் விபச்சார பெண் புரோக்கர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். தென்மாவட்டங்களில் குண்டர் சட்டத்தின் கீழ் இதுபோன்ற நபர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களில் மதுரை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 62 பெண் புரோக்கர்கள், 16விபச்சாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் விருதுநகரைச் சேர்ந்த ராஜாமணி மற்றும் மதுரை-அழகப்பன் நகரைச் சேர்ந்த கணபதி நாடார்ஆகியோர் முக்கியமான புரோக்கர்கள். இந்த இருவரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணை மதுரைக்குக் கடத்தி வந்து பின்னர் தூத்துக்குடியில் விபச்சாரத்தில்ஈடுபடுத்தியது இந்த ராஜாமணி தான்.

இந்த நிலையில் நேற்று மற்றொரு விபச்சாரக் கும்பல் சிக்கியது. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சேகர் என்பவர்சாந்தி என்ற விபச்சாரப் பெண்ணுடன் சிக்கினார். அவர்களிடமிருந்து ரூ.1,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேகரிடம் நடத்திய விசாரணையில், திருச்செந்தூரில் ஒரு குழு விபச்சாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகதெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் திருச்செந்தூர் விரைந்தனர். அங்கு செல்வி, ராஜன், லதா, மேரி ஆகியோரை போலீஸார்கைது செய்தனர். விபச்சாரம் நடத்த அனுமதித்த ஒரு விடுதியின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+