கொள்ளேகால், சாம்ராஜ்நகரில் தமிழர்கள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கர்நாடகத்தில் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், குண்டூல்பேட் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால் இந்தஎல்லைப் பகுதிகளில் வசிக்கும் பல தமிழர் குடும்பங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழகத்தில்தஞ்சம் புகத் தொடங்கியுள்ளனர்.

கர்நாடகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் பெரிய அளவில் எங்கும் வன்முறைநடக்கவில்லை. குறிப்பாக பெங்களூர், மைசூர் நகரங்களில் முழு அமைதி நிலவுகிது. இதனால் நேற்றிரவுநிறுத்தப்பட்ட தமிழக பஸ்கள் கூட அவ்வப்போது பெங்களூருக்குள் வந்து செல்கின்றன.

ஆனால், கர்நாடக- தமிழக காட்டுப் பகுதியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மைசூர் கிராமப் பகுதிகள், சாம்ராஜ் நாகர், கொள்ளேகால், குண்டூல்பேட் ஆகிய பகுதிகளில்தமிழர்களும், அவர்களது உடமைகளும் குறிவைத்து தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.

இந்தப் பகுதிகளில் சாலைகளில் டயர்களைப் போட்டு எரித்தும், பாறைகளை வைத்தும் தடைகளை ஏற்படுத்திவருகின்றனர். நேற்றிரவே கொள்ளேகால், ஹானூர் போன்ற பகுதிகளில் வன்முறை வெடித்தது.

சாம்ராஜ்நகரில் இன்று பந்த்தும் நடத்தப்பட்டது. அப்போது தமிழர்களை சில சமூக விரோதிகள் தாக்கினர்.

இதையடுத்து உயிரைக் காத்துக்கொள்வதற்காக தமிழர்கள் இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறத்தொடங்கியுள்ளனர்.

சத்தியமங்கலம் வழியாக அவர்கள் தமிழகத்தின் கோபிச் செட்டிப்பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகியஇடங்களுக்கு வந்து கொண்டுள்ளனர்.

இதுவரை 20 குடும்பங்கள் இதுபோல தமிழகத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தமிழக லாரி எரிப்பு:

நாகப்பாவின் சொந்த ஊரான காமகெரேயில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லாரி எரிக்கப்பட்டது. 3 கர்நாடக அரசுபஸ்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்தது. மேலும் 2 கார்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 2 போலீசாரை ஒரு கும்பல் தாக்கியது. பின்னர் அவர்களை உயிரோடுஎரிக்கவும் முயற்சி நடந்தது. ஆனால், விரைந்து வந்த ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அக்கும்பலை கலைத்தனர்.

பின்னர் போலீசாரை எரிக்க முயன்ற கும்பல் மாது நூற்றுக்கணக்கான போலீசார் தடியடி நடத்தினர். இதையும் மீறிகும்பல் தொடர்ந்து வன்முறையில் இறங்கியதால் போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

நாகப்பாவின் வீட்டில் செய்தி சேகரிக்க நின்றிருந்த நிருபர்களையும் வன்முறைக் கும்பல் விடவில்லை. தனியார்டிவி நிறுவனத்தின் கேமராவை அக் கும்பல் அடித்து நொறுக்கியது. இத் தாக்குதல் 6 நிருபர்கள் காயமடைந்தனர்.

இதற்கிடையே கோயம்புத்தூரில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பஸ் சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் கல் வீச்சுக்கு உள்ளானது. இதில் சில தமிழர்கள் காயமடைந்தனர். அதே போல மைசூர் சென்ற ஒருதமிழக பதிவு எண் கொண்ட காரும் சத்தியமங்கலம் அருதே தாக்கப்பட்டது.

ராமபுரா காவல் நிலையத்தின் மீதும் கல் வீச்சு நடந்தது. அந் நகர சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது. கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

அலுவலகங்கள், கல்லூரிகள் மூடல்:

நாகப்பா கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடிக்கலாம் என்று அஞ்சப்பட்டதால் இன்று கர்நாடகத்தில் அனைத்து அரசுஅலுவலகங்களும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன.

சிமோகா, கொள்ளேகால், மைசூர், ராம்புரா, மாண்டியா ஆகிய இடங்களில் பெரும் பதற்றம் நிலவியதால் இந்தஇடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

பெங்களூரில் தடையுத்தரவு:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களுரில் இன்று காலை 6 மணி முதல் வரும் 144வது பிரிவின்படிதடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது 10ம் தேதி நள்ளிவரவு வரை நீடிக்கும் என போலீசார்அறிவித்துள்ளனர்.

பெங்களூரில் பதற்றமான இடங்களில் பஸ் போக்குவரத்தையும் மாநகர போக்குவரத்துக் கழகம் நிறுத்தியது.

பதற்றம் நிறைந்த இடங்களில் கர்நாடக சிறப்பு அதிரடிப் படையினரும், ஆயுதப் படை போலீசாரும்குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் இறங்குபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே எச்சரித்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+