வீரப்பனைத் தேடும் பணியில் தமிழக, கர்நாடக படைகள் தீவிரம்
சென்னை:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா காட்டுக்குள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்துவீரப்பனைப் பிடிக்கும் பணியை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாகப்பா உடல் மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அகமதாபாத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி உடனடியாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
கர்நாடக அரசுடன் இணைந்து வீரப்பனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்போதுஜெயலலிதாவிடம் அத்வானி கேட்டுக் கொண்டார்.
இவ்விஷயத்தில் கர்நாடக அரசுடன் முழு ஒத்துழைப்பு அளிக்கப் போவதாக ஜெயலலிதாவும் அப்போதுஉறுதியளித்தார்.
இதையடுத்து காட்டுக்குள் வீரப்பனைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்முழு வீச்சில் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் வீரப்பனைத் தேடும் பணியை கர்நாடகஅதிரடிப்படையினரும் துவக்கி விட்டதாகக் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications