தீவிரவாதிகள் அடக்கி ஒழிக்கப்படுவார்கள்: ஜெ. சூளுரை
சென்னை:
தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வந்தாலும், அவர்கள் அடக்கி ஒழிக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தலைமைச் செயலகத்தில்உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் நடந்தது.
அதில் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு தீவிரவாதத்துக்கும் அனுமதி இல்லை.
அவர்களது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். முளையிலேயே கிள்ளி எறியப்படுவார்கள்.தீவிரவாதிகள் நிடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களை ஒருங்கிணைத்துகாவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு சமீபத்திய தர்மபுரி நிக்சலைட் விவகாரம்சரியான உதாரணம்.
அவர்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அடக்கி, ஒடுக்கப்படுவார்கள் என்பதற்கு தர்மபுரியில் போலீஸார்மேற்கொண்ட நக்சலைட் வேட்டை தான் சாட்சி.
தீவிரவாதிகள், சமூக விரோதிகளின் நடமாட்டம், அவர்கள் எங்கு, எப்படி உருவாகிறார்கள் போன்றவை குறித்துகாவல்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் முன் காப்போம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தமிழக காவல்துறையை நவீனமயமாக்க கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 272 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே நம்பர் ஒன் போலீஸார் என்ற பெயரை தமிழக போலீஸார் என்ற பெற முயற்சிக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை காவலர்களை நேரில் அழைத்து குறைகள் கேட்டுள்ளேன். அதுபோல உயர்அதிகாரிகளும் செயல்பட்டு தங்களுக்குக் கீழ் பணிபுரியும் காவலர்களின் குறைகளைக் களைய வேண்டும்.
15 அம்சத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்கமாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.
நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடும், மறுநாள் காவல்துறை அதிகாரிகள் மாநாடும் நடைபெறவுள்ளது.
முதலில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாடும் நாளை காவல்துறை அதிகாரிகள் மாநாடும் நடப்பதாக இருந்தது.ஆனால், நாகப்பா கொலையால் கர்நாடக எல்லைப் பகுதியில் எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு விவகாரத்தையடுத்துஇவை ஒத்தி வைக்கப்பட்டன.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications