வீரப்பனை பிடிக்க உதவினால் ரூ. 2 கோடி பரிசு: கர்நாடகம் அறிவிப்பு
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க்க உதவுபவர்களுக்கு ரூ. 2 கோடி வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துளளது.
நாகப்பாவின் மர்மமான மரணத்தையடுத்து முதல்வர் கிருஷ்ணா தலைமையில் கூடிய கர்நாடக அமைச்சரவையில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது. முன்னதாக அமைச்சரவை நாகப்பாவுக்கு மெளன அஞ்சலி செலுத்தியது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும்அவரை உயிருடன் மீட்க முடியாததற்கு வருத்தத்தையும் தெரிவித்தது.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா,
வீரப்பன் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய காட்டுப் பகுதிகளில் நடமாடி வருகிறான். இதனால் 3 மாநில முதல்வர்களின் கூட்டத்தைக்கூட்டி வீரப்பனை பிடிப்பது குறித்து பிரதமர் வாஜ்பாய் விவாதிக்க வேண்டும்.
3 மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து அவனைப் பிடிக்க கூட்டுத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
முன்பு வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.இந்தத் தொகையை ரூ. 2 கோடியாக அதிகரித்துள்ளோம்.
நாகப்பாவின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications