பெரம்பலூர் அருகே பஸ்-லாரி பயங்கர மோதல்: 21 பேர் படுகாயம்- 4 பேர் கவலைக்கிடம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே இன்று காலை அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 21 பேர் படுகாயம்அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்த் திசையில் ஒருசிமெண்ட் லாரி வந்து கொண்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே அரசு பஸ்சும் சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாகமோதிக் கொண்டன.
இவ்விபத்தில் 21 பேரில் சிலர் தூக்கி எறியப்பட்டும், சிலர் உடல் நசுங்கியும் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்தஇடத்தில் ரத்தம் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.
காயமடைந்த அனைவரும் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில்நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications