வீரப்பன் காட்டுப் பகுதியில் மர்ம ஆசாமியின் உடல் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கொளத்தூர்:

வீரப்பனின் காட்டுப் பகுதியில் ஏரியில் ஒரு பிணம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கொள்ளேகால் அருகே செங்கடி காட்டுப் பகுதியில் நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திற்குஅருகிலேயே இரண்டு உடல்கள் கிடப்பதாகத் தகவல் வந்தது. இதையடுத்து அதை மீட்பதற்காக கர்நாடகஅதிரடிப்படையினர் விரைந்தனர்.

ஆனால் உடல்கள் கிடப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இதை கர்நாடகபோலீசாரும் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தின் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஒரு ஏரியில்45 வயது மதிப்புள்ள ஒரு ஆண் பிணம் கிடப்பதை தமிழக அதிரடிப்படை வீரர்கள் கண்டனர்.

இதனால் அதிரடிப்படையினரிடையே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. உடனடியாக அதை மீட்டுக்கொண்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த உடலுக்கு போஸ்ட்மார்ட்டம்செய்யப்பட்டது.

இந்தப் பிணத்தின் உடலில் எந்தவிதமான காயமும் இல்லை என்றும், இதற்கும் வீரப்பனுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இது யாருடைய உடல் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மேட்டூர் போலீஸ் அதிகாரி ஒருவர்கூறினார்.

இதற்கிடையே தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் காட்டுக்குள் வீரப்பனைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+