வீரப்பனிடமிருந்து 7வது கேசட்: அமைச்சருக்கு வந்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கர்நாடக அரசுக்கு இன்று காலை 7வது கேசட் வந்துள்ளதாகத் தெரிகிறது.அந்த கேசட் அமைச்சர் மகாதேவாவிடம் தரப்பட்டுள்ளது. ஆனால், அதை முதல்வர் கிருஷ்ணா மறுத்துள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தியதிலிருந்து மொத்தம் ஆறு கேசட்டுகளைஅனுப்பியிருந்தான்.

தமிழக அதிரடிப்படையினர் தாக்கியதில் நாகப்பா காயமடைந்து விட்டதால் அவரை விடுவித்து விட்டதாகஆறாவது கேசட்டில் தான் வீரப்பன் கூறியிருந்தான். இதையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் தேடிய போதுதான் நாகப்பாவின் உடல் தான் கிடைத்தது.

இந்நிலையில் இன்று காலை வீரப்பனிடமிருந்து 7வது கேசட் வந்துள்ளதாக பரபரப்பான தகவல்வெளியாகியுள்ளது. கால்நடைத்துறை அமைச்சர் மகாதேவாவிடம் அந்த கேசட் வந்து சேர்ந்ததாக அவரதுவீட்டினர் தெரிவித்தனர்.

நாகப்பாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மகாதேவாவைத் தான் முதல்வர் கிருஷ்ணா அனுப்பியிருந்தார். ஆனால்,அவரை நாகப்பா ஆதரவாளர்கள் ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி விரட்டினர்.

இவரிடம் வந்துள்ள 7வது கேசட்டில் நாகப்பா கொலை தொடர்பாக வீரப்பன் பல பரபரப்பான தகவல்களைக்கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கிருஷ்ணா இந்தக் கேசட்டில் உள்ள தகவல்கள் குறித்துஆலோசனை நடத்தி வருவதாகவும் கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், வீரப்பனிடமிருந்து கேசட் வரவில்லை என கிருஷ்ணா மறுத்தார். வீரப்பனிடமிருந்து எந்தக் கேசட்டும்வரவில்லை. சில பத்திரிக்கைகளில் 3 உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூட செய்திகள் வந்துள்ளன. இது போன்ற தவறானசெய்திகளை பத்திரிக்கைகள் வெளியிடக் கூடாது என்றார் கிருஷ்ணா.

3 மாநில முதல்வர்கள் கூட்டம்?:

இந் நிலையில் வீரப்பன் விவகாரத்தில் வரும் 21ம் தேதி டெல்லியில் தமிழக, கர்நாடக, கேரள முதல்வர்களின் கூட்டம் பிரதமர்வாஜ்பாய் தலைமையில் நடக்கும் என்று தெரிகிறது.

அன்றைய தினம் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லியில் இருப்பர்.அப்போது இக் கூட்டத்தைக் கூட்டுமாறு கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது. அக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி,பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனையும் கலந்து கொள்ள செய்யவேண்டும் என கர்நாடகம் கோரியுள்ளது.

இக் கோரிக்கை ஏற்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுநரிடம் அறிக்கை:

இதற்கிடையே நாகப்பாவின் கொலையைத் தொடர்ந்து கொள்ளேகால் மற்றும் சாம்ராஜ்நகரில் ஏற்பட்டவன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு அம்மாநில ஆளுநர் சதுர்வேதிஉத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கர்நாடக டி.ஜி.பியான மடியாள் இன்று இது தொடர்பாக ஒரு அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல்செய்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+