நெல்லை, தூத்துக்குடியில் வயிற்றுப் போக்கு: 10 பேர் பலி- மக்கள் பீதி
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வயிற்றுப் போக்கு காரணமாக கடந்த 2நாட்களில் மட்டும் 10 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் 50 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். இதையடுத்து அப்பகுதி மக்களிடையே கடும் பீதி கிளம்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்கடந்த இரண்டு நாட்களாக திடீர் வயிற்றுப் போக்கினால் கடுமையாக அவதிப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஏழு பேர் உயிரிழந்ததையடுத்து, அந்தக் கிராமங்களில் பெரும் பீதிஏற்பட்டது. இவர்களைத் தவிர மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் டி. சண்முகாபுரத்தில் மூன்று பேர் வயிற்றுப் போக்கு காரணமாகதிடீரென்று இறந்தனர். மேலும் 44 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் மத்தியில் திடீர் பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.அசுத்தமான தண்ணீரைக் குடித்ததாலேயே இந்தத் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நலத் துறை அதிகாரிகளும், டாக்டர்களும் விரைந்துள்ளனர். பல்வேறுகிராமங்களிலும் முகாமிட்ட அவர்கள் மக்களுக்குத் தடுப்பு மருந்துகளை அளிக்கும் பணிகளையும்துவக்கியுள்ளனர்.
தண்ணீரை காய்ச்சி வடித்து குடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications