வீரப்பனைப் பிடிப்பதற்கு உதவ தயார்: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான அனைத்து வகை உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராகஇருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சாமி கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வீரப்பனைப் பிடிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இதைஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம்.
தமிழக, கர்நாடக அரசுகளுக்குத் தேவைப்படும் கமாண்டோக்கள், அதிநவீன கருவிகள், துணைப் பாதுகாப்புப்படைப் பிரிவுகள் என சகலவிதமான உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
நாகப்பா சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தால் அதை நிச்சயம் மத்தியஅரசு பரிசீலிக்கும் என்றார் சாமி.
-->












Click it and Unblock the Notifications