வீரப்பனைப் பிடிக்க மத்திய கொரில்லா படை வந்தது
மைசூர்:
தமிழக, கர்நாடக அதிரடிப்படைகளுடன் சேர்ந்து வீரப்பனைப் பிடிக்க மத்திய ரிசர்வ் போலீசின் கொரில்லா படை வந்துள்ளது.
டெல்லியில் இருந்து இந்தப் படையினர் சிறப்பு விமானத்தில் மைசூர் வந்திறங்கினர். இந்தப் படையினர் மலே மாதேஸ்வரன்மலைப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.
நாகப்பா கொல்லப்பட்டதையடுத்து வீரப்பன் விவகாரத்தை மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இந்த கொரில்லா படை அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் படையினர் இன்சாஸ் ("INSAS") ரக நவீனதுப்பாக்கிகளைப் பயன்படுத்தும் படைப் பிரிவுகளில் ஒன்றாகும். இரவு நேரத்திலும் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்துதாக்குதல் நடத்தும் துப்பாக்கி இது.
இவர்கள் இமாலயத்தில் மலைப் பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
வந்தார் மத்திய அதிகாரி:
முன்னதாக இன்று மத்திய உள்துறை செயலாளர் கோபால்சாமி திடீரென சென்னை வந்தார். இதையடுத்து கர்நாடககர்நாடக டி.ஜி.பி. மடியாள், அம்மாநில முதல்வரின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசலு உள்ளிட்ட அதிகாரிகளும்சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் கோபால்சாமி தலைமையில் வீரப்பனைப் பிடிப்பது குறித்து சிறப்புக் கூட்டம் நடந்தது.
அதில் தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டி.ஜி.பி. நெய்ல்வால், உள்துறை செயலாளர் முனீர்ஹோடா, அதிரடிப்படையின் முன்னாள் துணைத் தலைவரான சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார்உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக மத்தியப் படைகள், அதிநவீன ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைபயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கொன்றது யார்?: மத்திய அரசு கேள்வி
மேலும் நாகப்பாவின் மர்மமான சாவு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
உண்மையிலேயே அவரைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்து கொள்ளவே கோபால்சாமி சென்னைவந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழக அல்லது கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பனுடன் என்கெளண்ட்டரில் ஈடுபட்டார்களா என்பதுகுறித்தும், அதனால்தான் நாகப்பா இறந்தாரா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.
தமிழக, கர்நாடக டி.ஜி.பிக்கள் சந்திப்பு:
இதன் பின்னர் இன்று மாலை கர்நாடக டி.ஜி.பியும் பாதுகாப்பு ஆலோசகரும், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டஅதிகாரிகளை தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கர்நாடகபாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசலு பேசுகையில்,
கர்நாடகத்தின் செங்கடி காட்டுப் பகுதியில் நாகப்பாவின் உடலைத் தவிர வேறு எந்த உடலும் கிடைக்கவில்லை.மற்றொரு உடல் கிடைத்ததாக வந்த தகவல்களில் உண்மையில்லை.
மேலும் நாகப்பாவின் மரணம் குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் அதற்கு யார் காரணம்என்பதையும் எங்களாலேயே இன்னும் சொல்ல முடியவில்லை என்றார் சீனிவாசலு.
"டாப் சீக்ரெட்": நெய்ல்வால்
இதற்கிடையே இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு மாநில டி.ஜி.பிக்களும் தெரிவிக்கமறுத்துவிட்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் "டாப் சீக்ரெட்" என்று தெரிவித்த நெய்ல்வால், அதைப்பற்றி வெளியே கூற முடியாது என்றும் கூறினார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மடியாள் பேசுகையில், நாகப்பாவைக் கொன்றது யார்என்பது குறித்து இன்னும் விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
அத்வானியுடன் சந்திப்பு:
இதற்கிடையே இன்று காலை டெல்லியில் துணைப் பிரதமர் அத்வானியை கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே சந்தித்தார். வீரப்பனைப் பிடிக்க அனைத்து உதவிகளையும் அவர் கேட்டார்.
மேலும் நாகப்பா கொலை குறித்த கர்நாடக அரசின் விளக்கத்தையும் அத்வானியிடம் அளித்தார்.
-->
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications