மத்திய, கர்நாடக அதிகாரிகள் திடீர் வருகை: சென்னையில் ஆலோசனை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பது குறித்து கூட்டுத் திட்டம் வகுப்பது குறித்து மத்திய உள்துறை செயலாளர்கோபால்சாமி தலைமையில் தமிழக, கர்நாடக டி.ஜி.பிக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இன்று காலை மத்திய அரசு அதிகாரியான கோபால்சாமி திடீரென சென்னை வந்தார். தமிழக தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ், தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால், தமிழக உள்துறை செயலாளர் முனீர் ஹோடா,சென்னை மாநக போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில்ஈடுபட்டார்.
அவர் வந்த சிறிது நேரத்தில் கர்நாடக டி.ஜி.பி. மடியாள், அம்மாநில முதல்வரின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசலுஉள்ளிட்ட அதிகாரிகளும் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
இதன் பின்னர் இன்று பகல் 12.30 மணியளவில் தமிழக தலைமைச் செயலகத்தில் கோபால்சாமி தலைமையில்கூட்டம் நடந்தது.
வீரப்பனைப் பிடிப்பதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஐ.டி. சாமி நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி வீரப்பனைப் பிடிப்பதற்காக ராணுவம், அதிநவீன ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைவீரப்பன் காட்டுக்குள் அனுப்பலாமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் நாகப்பாவின் மர்மமான சாவு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உண்மையிலேயே தமிழகஅல்லது கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பனுடன் என்கெளண்ட்டரில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும்,அதனால்தான் நாகப்பா இறந்தாரா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கர்நாடக டி.ஜி.பியும் பாதுகாப்பு ஆலோசகரும் இன்று மாலை தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துவீரப்பனைப் பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் பெங்களூர் புறப்பட்டுச்செல்வார்கள்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மடியாள் பேசுகையில், நாகப்பாவைக் கொன்றது யார்என்பது குறித்து இன்னும் விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார். ஆனால் நாகப்பா உடலின்போஸ்ட்மார்ட்ட விவரம் குறித்து எதுவும் தெரிவிக்க மடியாள் மறுத்துவிட்டார்.
அத்வானியுடன் சந்திப்பு:
இதற்கிடையே இன்று டெல்லியில் துணைப் பிரதமர் அத்வானியை கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே சந்தித்தார். வீரப்பனைப் பிடிக்க அனைத்து உதவிகளையும் அவர் கேட்டார். மேலும் நாகப்பா கொலைகுறித்த கர்நாடக அரசின் விளக்கத்தையும் அத்வானியிடம் அவர்தெரிவித்தார்.
-->
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications