கூட்டு அதிரடிப்படை அதிகாரிகள் மேட்டூரில் ரகசிய ஆலோசனை
சேலம்:
வீரப்பன் தேடுதல் வேட்டை தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படை உயர் அதிகாரிகளின் ரகசியஆலோசனைக் கூட்டம் மேட்டூரில் நடந்தது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி மீண்டும் சூடு பிடித்துள்ளது. நாகப்பா சாவுக்குப் பிறகு இரு மாநிலஅதிரடிப்படைகளும் மீண்டும் காட்டுக்குள் புகுந்து தீவிர வீரப்பன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மேட்டூரில் தமிழக, கர்நாடக அதிரடிப்படை உயர் அதிகாரிகளின் ரகசியக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார்3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் வீரப்பனைப் பிடிக்கத் தேவையான ஆயுதங்கள், அதிநவீன கருவிகள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே வீரப்பன் தொடர்ந்து கர்நாடக காட்டுப் பகுதிக்குள்தான் இருப்பதாக இரு மாநில அதிரடிப் படைவீரர்களும் நம்புகிறார்கள். எனவே கர்நாடக காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வீரப்பன் தமிழக எல்லைக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக தமிழக காட்டு எல்லையில் ஏராளமானஅதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வீரப்பன் நடமாட்டம் உள்ள மலைப் பகுதி கிராம மக்களும், பழங்குடி மக்களும் சரியான முறையில்துப்புக் கொடுத்தால் வீரப்பனை எளிதில் பிடித்து விடலாம் என்று கூடுதல் டி.ஜி.பியான வை. பாலச்சந்திரன்கூறினார்.
முன்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வீரப்பன் நடமாட்டம் தொடர்பாக இரு மாநில அதிரடிப்படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.தங்களுக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களையும் அவர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அதிரடிப்படைகள் உறுதி பூண்டுள்ளன என்றார்பாலச்சந்திரன்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications