அருள் வந்ததாகக் கூறி நாட்டாமையை வெட்டிக் கொன்ற பெண்
திருத்தங்கல்:
சிவகாசி அருகே திருத்தங்கலில் தனக்கு அருள் வந்ததாகக் கூறி டான்ஸ் ஆடிய பெண், சாமி கும்பிட வந்த நாட்டாமையை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் (45). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது கணவர் இறக்க, அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி என்ற நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சிவகாசி அருகே ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இந் நிலையில் நேற்று பழனியம்மாள்வீட்டில் உட்கார்ந்திருந்தபோது தனக்கு சாமி வந்துவிட்டதாகக் கூறி திடீரென டான்ஸ் ஆடினார்.
பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு தெருவில் ஓடினார். கையில்அரிவாளுடன் கண்களில் வெறியுடன் கத்திக் கொண்டே ஓடிய வந்த அந்தப் பெண்ணைக் கண்டு மக்கள் சிதறி ஓடினர்.
ஊருக்கு வெளியே உள்ள அய்யனார் கோவிலுக்குச் சென்றார் பழனியம்மாள். அப்போது அய்யம்பட்டியைச் சேர்ந்தநாட்டாமையான பால்சாமி (65) அந்த கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
திடீரென அவருக்குப் பின்னால் போய் நின்ற பழனியம்மாள், டேய் நீ தானே என்னைத் திட்டினே என்று கத்திக் கொண்டே அவரைஅரிவாளால் வெட்டினார். முதியவரான பால்சாமி கீழே விழுந்தார். வெறி கொண்ட அந்தப் பெண்ணிடம் இருந்து தப்பி ஓடினார்.
ஆனால், அவரை விரட்டிச் சென்ற அந்தப் பெண் அரிவாளால் வாயிலேயே பல முறை வெட்டினார். இந்த வாய் தானே என்னைத்திட்டியது என்று கூறிக் கொண்டே வெட்டினார்.
இதில் முகம் கிழிந்து பால்சாமி சிறிது நேரத்தில் கோவில் அருகிலேயே இறந்தார்.
இதன் பின்னர் தனது வீட்டுக்கு ஓடிப் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டார் பழனியம்மாள். சம்பவம் அறிந்து வந்த போலீசார்அவரைக் கைது செய்தனர்.
இவருக்கும் பால்சாமிக்கும் ஏதாவது முன் விரோதம் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதைத் தீர்த்துக் கொள்ள சாமிவந்ததாகக் கூறி நடித்து பால்சாமியை இந்தப் பெண் வெட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications