காவல் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
சேலம்:
வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதியையொட்டி உள்ள காவல் நிலையங்களுக்கு பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் கும்பல் கைவரிசை காட்டலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறுமுகை, நீலகிரி, தர்மபுரி, சேலம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதி காவல் நிலையங்களில்கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்ட, இளம் போலீஸார் இங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை அவசரத்துக்கு அதிரடிப்படையினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் வீரப்பன் கும்பல் காவல் நிலையங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி ஆயுதங்களைப் பறித்துப்போய் உள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.
மேலும் இப்போதுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையாவது வீரப்பன் உடனடியாகக் கடத்தி தமிழகஅரசுக்குத் தொல்லை தருவான் என உளவுப் பிரிவு எதிர்பார்க்கிறது.
காட்டுப் பகுதியில் வி.ஐ.பிக்கள் நடமாட்டம் ஏதும் இல்லாததால், காவல்துறை அல்லது வனத்துறையினரைவீரப்பன் கடத்த முயற்சிக்கலாம் என்று கருதப்படுகிறது.
மாதேஸ்வரன் மலை முற்றுகை:
இதற்கிடையே சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதேஸ்வரன் மலைப் பகுதி காட்டுக்குள் பதுங்கியிருப்பதாக வந்ததகவலையடுத்து அங்கு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப் படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில்இறங்கியுள்ளனர்.
நாகப்பா படுகொலைக்குப் பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இரு மாநில அதிரடிப்படையினரும் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், மாதேஸ்வரன் மலைப் பகுதி காட்டுக்குள் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாக உளவுப் பிரிவுதகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரு மாநில அதிரடிப்படை போலீஸாரும் தீவிரதேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து வந்த சி.ஆர்.பி.எப். கொரில்லா படையும் இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications