விமான நிலையத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பு மதர்போர்டுகள், பிராஸஸர்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ. 24 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில், கூரியர் பார்சல் மூலம் பல லட்சம் பெறுமானள்ளகம்ப்யூட்டர் சாதனங்கள் கடத்தப்படுவதாக சென்னை வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல்வந்தது.
இதையடுத்து வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி வீரையன் உத்தரவின் பேரில் போலீஸார், விமானநிலைய பார்சல்களை சோதனை போட்டனர்.
அப்போது டெல்லிக்கு அனுப்பப்படவிருந்த பார்சலைப் பிரித்தபோது அதில் 10 சந்தேகத்திற்கிடமான பெட்டிகள்இருந்தன. அதில் 4,500 கம்ப்யூட்டர் மதர்போர்டுகள், பென்டியம் 4 பிராஸஸர்கள் இருந்தன.
டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் இது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சாதனங்களின் மதிப்பு ரூ.24 லட்சம் என்று தெரிகிறது.
இது குறித்து விசாரித்தபோது டெல்லியில் அப்படிப்பட்ட நிறுவனமே இல்லை என்றும் தெரியவந்தது.
கூரியர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கும்பல் இந்த மோசடி வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகக்கருதப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications