தலித் பெண்கள் சைக்கிள் ஓட்ட தடை: பெரம்பலூரில் கொடுமை
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட ஜாதியினர் வசிக்கும் தெருவில் தலித் பெண்கள் சைக்கிளில் வரக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர் தடையை மீறிசைக்கிளில் செல்லும் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் பேரணைக் கிராமத்தில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் தெருவில், தலித்மக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சைக்கிளில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தலித்மக்கள் எதிர்த்தாலும் கூட அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலைதான் உள்ளது.
இந்நிலையில் தலித் பெண்களின் அவலத்தைப் போக்கும் வகையில் குறிப்பிட்ட அந்தத் தெருவில் தடையை மீறிசைக்கிளில் சென்று போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர்அறிவித்திருந்தனர்.
அந்த அமைப்பின் தலைவி சுபாஷினி தலைமையிலான குழுவினர் பேரணைக் கிராமத்திற்குள் நுழைந்தபோது,கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் தெருவில் கால் எடுத்து வைக்கக் கூடாது என்றும், மீறினால்நடப்பதே வேறு என்று குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இருப்பினும் தடையை மீறி சைக்கிளில் செல்வோம் என்று கூறி விட்டு சுபாஷினி உள்ளிட்டோர் அந்தத் தெருவைஅடைந்தனர். ஆனாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக, மகளிர் சங்கத்தினரைசைக்கிளில் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.
தீண்டாமைக் கொடுமை எந்தளவுக்கு இன்னும் தலைவிரித்தாடுகிறது என்பதையே இந்தக் கொடும் செயல்காட்டுவதாக சுபாஷினி நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications