மோடிக்கு ஜெ. வாழ்த்து
சென்னை:
குஜராத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திரமோடிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 12ம் தேதி நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
தேர்தல் நடந்த 181 இடங்களில் 127 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரசுக்கு வெறும் 50 இடங்கள்மட்டுமே கிடைத்தன.
பா.ஜ.கவின் இந்தப் பிரம்மாண்டமான வெற்றிக்காக மோடிக்கு ஜெயலலிதா பாராட்டுக்களையும்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொலைபேசி மூலம் அவர் மோடியிடம் பேசுகையில்,
நீங்கள் மணிநகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்காகவும், குஜராத்தில் பா.ஜ.க. அதிகப் பெரும்பான்மைபெற்றுள்ளதற்காகவும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் கமிஷன் மற்றும் பத்திரிக்கைகள் ஆகியவற்றின் விரோதமான போக்குகளையும் மீறி நீங்கள் பெற்றுள்ளஇந்த வெற்றிக்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.
குஜராத் மக்களுக்கு உங்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என்று மோடியிடம் தொலைபேசியில் பேசினார் ஜெயலலிதா.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அடிக்கடி தாக்கிப் பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளருமானஜெயலலிதா, பா.ஜ.கவை நோக்கி மீண்டும் நகர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications