புலிகள் வானொலிக்கு இலங்கை அரசு அனுமதி
கொழும்பு:
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் எப்.எம். அலைவரிசை வானொலியை நிறுவுவதற்கு இலங்கை அரசுலைசென்ஸ் வழங்கியுள்ளது.
இந்த வானொலியை அமைப்பதற்காக நார்வே நாட்டிலிருந்து பிரம்மாண்டமான ஒலிபரப்புக் கருவிகள் சிலநாட்களுக்கு முன் இலங்கை வந்து சேர்ந்தன. சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள அவற்றைஇலங்கை ராணுவமே பாதுகாப்பாக புலிகளிடம் கொண்டு வந்து சேர்த்தது.
புலிகளின் இந்தப் புதிய எப்.எம். வானொலி அலைவரிசை மூலம் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இலங்கைமுழுவதும் உள்ள மக்கள் கேட்க முடியும். மேலும் தென் இந்தியாவிலும் இதன் ஒலிபரப்பைத் தெளிவாகக் கேட்கமுடியும் என்றும் தெரிகிறது.
ஆனால் புலிகளுக்கு இலங்கை அரசு இவ்வாறு உதவுவதை அந்நாட்டின் பல எதிர்க் கட்சிகள் கடுமையாகஎதித்தன. புலிகளுக்கு அளவுக்கு அதிகமாக இலங்கை அரசு இடம் கொடுப்பதாகவும் அவை புகார்களைக் கூறின.
இந்நிலையில் புலிகள் இந்த எப்.எம். ஒலிபரப்பைத் தொடங்கலாம் என்று இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தற்போது வெற்றிகரமாக நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்அடுத்த மைல் கல்லாகவே புலிகளுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கிடையே தென் இந்தியாவிலும் புலிகளின் ஒலிபரப்பு கேட்கும் பட்சத்தில் அதை இந்தியா கடுமையாகஎதிர்க்கும் என்று தெரிகிறது.
இலங்கையின் முக்கிய எதிர்க் கட்சியான மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் கூட சமீபத்தில் இந்தியாவந்திருந்தபோது இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களிடம் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குஎதிராகவும் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இந்த ஒலிபரப்பு கேட்டால் அதைத்தடுப்பதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளும் எடுக்கும்.
இந்தியாவிடம் பிரபாகரன் ஒப்படைப்பா?:
இதற்கிடையே புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரச்சினைகுறித்து இந்திய அரசு நிதானமாக முடிவெடுக்கும் என நம்புவதாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைஅமைச்சர் திலக் ஜனகா கூறினார்.
டெல்லி செல்லும் வழியில் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து இந்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இது முழுக்க முழுக்க இந்தியாவின் பிரச்சினை.
இப்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், பிரபாகரன் பிரச்சினை குறித்து பேசத்தேவையில்லை. வேறொரு சமயத்தில் இந்திய அரசே இதுகுறித்து நிதானமாக முடிவெடுக்கும் என்று நம்புகிறோம்.
தாய்லாந்தில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது பல உடன்பாடுகள் எட்டப்பட்டுவருகின்றன.
இனி வரும் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளின் ராணுவம், போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள்போன்றவற்றை இலங்கை அரசின் தலைமையின் கீழ் கொண்டு வரும் வகையில் உடன்பாடுகள் நிறைவேற்றப்படும்.
இலங்கையில் முழு அளவில் அமைதி திரும்பி வருகிறது. தமிழர் பகுதிகளில் பஸ் போக்குவரத்து கிட்டத்தட்ட முழுஅளவில் நடந்து வருகிறது. சண்டை ஓய்ந்து விட்டதால், இப்போது இலங்கை மக்கள் வளர்ச்சிப் பணிகளில்அக்கறை செலுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள ரயில்வே திட்டங்களைப் போலவே இலங்கையிலும் மேற்கொள்ளவுள்ளோம்.அதுதொடர்பாக ஆலோசிக்கவே டெல்லி செல்கிறேன்.
இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் உதவி இல்லாமல் அமைதித் தீர்வு ஏற்படவாய்ப்பில்லை. இந்தியாவின் உதவி கட்டாயம் எங்களுக்குத் தேவை என்றார் அமைச்சர்.ரப் பகுதிக்கு அருகில் வரும் என்பதால் இவற்றின்மூலம் ஆட்களைக் கடத்துவது எளிதாக இருந்து வருகிறது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications