பாண்டிச்சேரி: தற்கொலை மிரட்டல் விடுத்த 3 சட்ட மாணவர்கள் கைது
பாண்டிச்சேரி:
தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் கட்டடத்தின் மேலேயிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்றுமிரட்டிய புதுவை சட்டக் கல்லூரி மாணர்வர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாண்டிச்சேரி சட்டக் கல்லூரியில் 3வது ஆண்டு படித்து வருபவர் விஜயகாந்த். கடந்த 11ம் தேதி நடப்பதாகஇருந்த செமஸ்டர் தேர்வை எழுத இவர் அனுமதிக்கப்படவில்லை.
போதுமான வருகைப் பதிவு இல்லாத காரணத்தால் இவரை தேர்வு எழுத அனுமதிக்க கல்லூரி முதல்வர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த், அவரது நண்பர்கள் ஜெரால்ட் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்துகல்லூரிக் கட்டடத்தின் கூரை மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர்.
விஜயகாந்த்தை பரீட்சை எழுத அனுமதித்தால்தான் கீழே இறங்குவோம் என்றும் மிரட்டினர்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார் என்று கல்லூரி முதல்வர் உறுதிமொழிகொடுத்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் இறங்கி வந்தனர். இந்த பரபரப்பு காரணமாக அன்று நடக்கவிருந்தசெமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் மூன்று மாணவர்கள் மீதும் பாண்டிச்சேரி போலீஸில் கல்லூரி முதல்வர் புகார் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்கள் மீதும் தற்கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்து போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் மூன்று பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications