ஜெ. தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக் குழு
சென்னை:
அதிமுகவின் 2 நாள் பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமானஜெயலலிதா தலைமையில் நாளை தொடங்குகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் முறையாகப் பொதுக் குழு கூடுவதால், இதுமிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அதிமுகவின் பலம், பலவீனம் ஆகியவை குறித்து பொதுக் குழு உறுப்பினர்களிடையேதீவிரமாக விவாதிக்கவுள்ளார் ஜெயலலிதா.
இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கட்சியில் பல்வேறு மாற்றங்களைக்கொண்டுவரவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் தலைகள் "உருளும்" என்று கூறப்படுவதால், அவர்கள் அனைவரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.
ஏற்கனவே ஆட்சிக்கு வந்த 19 மாதங்களில் சுமார் 20 முறை அமைச்சரவையை மாற்றியுள்ளார் ஜெயலலிதா.மேலும் 23 அமைச்சர்களுக்கு "கல்தா"வும் கொடுக்கப்பட்டது.
அமைச்சர்களின் கதியே இப்படியென்றால் தங்களுடைய நிலை பற்றி கேட்கவே வேண்டாம் என்பதால், என்னநடக்குமோ என்ற பீதியில் கட்சி நிர்வாகிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் முக்கிய அமைச்சர்களான தம்பிதுரை மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டநிலையில், மேலும் சில அமைச்சர்களையும் ஜெயலலிதா நீக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து அமைச்சர் பதவிகளைப் பிடுங்கிக் கொண்டு, கட்சிப் பணிகளுக்கு அவர்களை அனுப்பஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சில அமைச்சர்களும் கலங்கிப் போய்தான் உள்ளனர்.
கடந்த 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தபோது பல மாவட்ட நிர்வாகிகள்பந்தாடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பொதுக் குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன், செயற்குழுக் கூட்டமும் நடைபெறும் என்று அதிமுகவட்டாரங்கள் தெரிவித்தன.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications