ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு கலாம் திடீர் விசிட்
சென்னை:
சென்னை அருகே உள்ள ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திடீர்விசிட் அடித்தார். சுய உதவிக் குழு பெண்களுடன் அவர் சிறிது நேரம் பேசினார்.
சென்னை வந்திருந்த டாக்டர் கலாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த சமயத்தில், தமிழகத்தில்பெண்களைக் கொண்டு இயங்கும் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதாஅவரிடம் தெரிவித்திருந்தார்.
இதை மனதில் வைத்திருந்த டாக்டர் கலாம், டெல்லி கிளம்புவதற்கு முன்பு அவர்களைப் பார்க்க வேண்டும் என்றுவிருப்பம் தெரிவித்தார்.
ஜனாதிபதி திடீரென்று இவ்வாறு கூறியதையடுத்து, உடனடியாக சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கும்பெண்களை அதிகாரிகள் திரட்டினர்.
சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேடவாக்கம், பொழிச்சலூர், திரிசூலம், நன்மங்கலம்கிராமங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுப் பெண்கள் உடனடியாக ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்திற்குவரவழைக்கப்பட்டனர்.
டாக்டர் கலாமும் அங்கு வந்து சேர்ந்தபோது சுமார் 100 பெண்கள் வரை அங்கு குழுமியிருந்தனர். அவர்களைப்பார்த்ததும் சந்தோஷமடைந்த டாக்டர் கலாம், அவர்களுக்கு மத்தியில் சென்று சகஜமாக பேசினார்.
என்ன பணிகள் செய்கிறார்கள் என்ற விவரத்தை மிகவும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி,அவர்களிடம் பல கேள்விகளையும் கேட்டார். அவர்கள் தயாரித்திருந்த பொருட்களையும் பார்த்து பாராட்டினார்.
சுமார் 45 நிமிடங்கள் அங்கு இருந்தார் டாக்டர் கலாம். ஜனாதிபதியை மாநில சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, செயலாளர் கரியாலி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ராஜாராமன் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள்வரவேற்றனர்.
டாக்டர் கலாமுக்கு சுய உதவிக்குழு பெண்கள் நினைவுப் பரிசு ஒன்றையும் அளித்தனர்.
மாணவர்களுக்கு ஈ-மெயிலில் கலாம் பதில்:
இதற்கிடையே பள்ளி மாணவ, மாணவியர் தன்னிடம் கேள்விகள், விளக்கங்கள் ஏதும் கேட்க விரும்பினால்தனக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பி கேட்கலாம் என்று டாக்டர் கலாம் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவியருடனான கலந்துரையாடலின்போதுஅவரிடம் மாணவ, மாணவியர் ஏராளமான சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர்.
கேள்வி கேட்பதன் மூலம் மட்டுமே ஒருவரது அறிவு வளர்ச்சி பெரிதாக முடியும். கேள்வி இல்லையேல் அறிவியல்இல்லை என்று கூறிய டாக்டர் கலாம், மாணவர்கள் கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது என்றார்.
தன்னிடம் மேலும் கேள்வி கேட்க விரும்பும் மாணவ, மாணவியர் தனக்கு ஈ-மெயில் மூலமும் கேள்விகளைஅனுப்பலாம். அவற்றிற்கு மூன்று நாட்களில் பதில் அனுப்புவதாகக் கூறிய ஜனாதிபதி, தன்னுடைய இணைய தளமுகவரியையும் கொடுத்தார்.
கலாமின் இணைய தள முகவரி: www.presidentofindia.nic.in
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications