பா.ஜ.க. பெற்றது இந்துத்துவா வெற்றி அல்ல: கருணாநிதி கருத்து
சென்னை:
குஜராத்தில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்துள்ள வெற்றி இந்துத்துவா கொள்கைக்குக் கிடைத்த வெற்றி அல்ல என்று திமுகதலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
உண்மையில் இந்துத்துவா கொள்கையை முன்னிருத்தி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. ஓட்டு கேட்கவில்லை. பிரதமர்வாஜ்பாயோ அல்லது துணைப் பிரதமர் அத்வானியோ ஒரு இடத்தில் கூட இந்துத்துவா குறித்துப் பேசவில்லை.
எனவே இது இந்துத்துவாவிற்கு கிடைத்த வெற்றியாக இருக்க முடியாது. சொல்லப் போனால், இந்தியாவை இந்துநாடாக மாற்ற மாட்டோம் என்று கூறித்தான் பா.ஜ.க. ஓட்டுக் கேட்டது.
திராவிடக் கட்சிகள் சந்தர்ப்பவாத கட்சிகள் என்று காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி பதவியில் உள்ளது. இதை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்.இந்த நேரத்தில் அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்தை பலவீனமாக்கும் வகையில், திமுகவுக்கு எதிரான போக்குகொண்ட கட்சிகள் குறித்து பேச விரும்பவில்லை.
எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து திமுக செயல்படலாம். அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் கருணாநிதி.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு:
முன்னதாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவை என்றுசென்னையில் நடந்த திமுக மகளிர் கருத்தரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக மகளிர் அணியின் சார்பில் மகளிர் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா அறிவாலயவளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கருணாநிதி தலைமையில் இந்த கருத்தரங்கம் நடந்தது.
இதில், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மகளிர் நலத்திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தவேண்டும், சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில்நிறுவ வேண்டும், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும்சட்ட மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
விரைவில் திமுக மகளிர் அணி சார்பில் மாநில அளவிலான மாநாடு நடத்தப்படும் என்று கருணாநிதி இந்தக்கருத்தரங்கில் தெரிவித்தார்.
கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள்சுப்புலட்சுமி ஜெகதீசன், சற்குணபாண்டியன், துரைமுருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications