Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகப்பா சாவு: நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மர்மமான மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கர்நாடக அரசுஇன்று உத்தரவிட்டது.

தமிழக அதிரடிப்படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நாகப்பா காயமடைந்ததால் அவரைகாட்டிலேயே விடுவித்து விட்டேன் என்று வீரப்பன் அனுப்பிய ஆறாவது கேசட்டில் அவன் கூறியிருந்தான்.

இதையடுத்தே காட்டுக்குள் சென்று தேடிய கர்நாடக அதிரடிப்படையினர் அவரை உடலைத்தான் மீட்டு வந்தனர்.

இதையடுத்து தமிழக அதிரடிப்படையினர்தான் நாகப்பாவைக் கொன்றதாகப் பரவலாகக் கூறப்பட்டது. ஆனால்தமிழக அரசு இதைக் கடுமையாக மறுத்துள்ளது. வீரப்பன்தான் அவரைக் கொன்றுவிட்டு பழியைத் தமிழக அரசுமீது போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ள நாகப்பாவின் சாவுக்கு யார் காரணம் என்று இன்று வரை மர்மமாகவேஉள்ளது. அவர் உடல் கண்டெடுக்கப்பட்டு எட்டு நாட்களாகிவிட்ட நிலையில் கர்நாடக அரசும் எந்த ஒருரியாக்சனும் காட்டாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று பெங்களூரில் கூடிய கர்நாடக அமைச்சரவையில், நாகப்பாவின் சாவு குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் கர்நாடக செய்தித் துறைஅமைச்சர் காகோடு திம்மப்பா நிருபர்களிடம் கூறுகையில்,

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான கமிஷன் நாகப்பாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பணியிலிருக்கும் நீதிபதியா அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியா என்பது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார்.

நாகப்பா கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார்கோரியதை கர்நாடக அரசு மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பா வீட்டுக்கு வந்த மர்ம கடிதம்:

இதற்கிடையே நாகப்பாவின் படுகொலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்றுகுறிப்பிடப்பட்டுள்ள ஒரு கடிதம் நாகப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளது.

நாகப்பா எவ்வாறு இறந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில் சேலத்திலிருந்துநாகப்பாவின் வீட்டுக்கு தபால் மூலம் வந்துள்ள ஒரு கடிதத்தில்,

நாகப்பாவை விடுதலை செய்து செங்கடி காட்டில் விடுவதற்கு வீரப்பன் திட்டமிட்டிருந்தான்.

வீரப்பனின் இந்தத் திட்டத்தைத் தெரிந்து கொண்ட ஜெயலலிதா, அவனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகதமிழக அதிரடிப்படையினரை முடுக்கி விட்டார்.

வீரப்பனைப் பிடிக்க முயற்சிக்கும்போதுதான் தமிழக அதிரடிப்படையினர் சுட்டதில் நாகப்பா இறந்து விட்டார்என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் கையெழுத்து இல்லை. அனுப்புநர் முகவரியும் இல்லை. பெறுநர்முகவரி ஆங்கிலத்தில் இருந்தது.

எலும்பு குவியல் கண்டுபிடிப்பு:

இதற்கிடையே நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கிடந்த சில எலும்புத்துண்டுகளை கொள்ளேகால் பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர்.

மேலும் அந்த இடத்தில் மூங்கிலால் செய்யப்பட்டிருந்த பல்லக்கு போன்ற ஒரு ஸ்டிரெச்சர் கிடப்பதையும் அவர்கள்கண்டெனர்.

அந்த இடத்தைப் போட்டோ எடுத்துக் கொண்ட அவர்கள், அந்தப் பொருட்களையும் போட்டோக்களையும்கொண்டு சென்று நாகப்பாவின் குடும்பத்திடம் சேர்த்தனர்.

சுத்தூர் மடாதிபதிக்கு பாதுகாப்பு:

இந்நிலையில் வீரப்பன் தன்னை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடத்துவான் என்று சுத்தூர் மடாதிபதியானஸ்ரீசிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து அவருக்கு "இசட்" பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக கர்நாடக அரசு வட்டாரங்கள்தெரிவித்தன.

நாகப்பாவின் ஜாதியைச் சேர்ந்த மடாதிபதிதான் இந்த சிவராத்திரி சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பாவின் குடும்பத்தினருக்கும் "ஒய்" பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+