குஜராத் தேர்தல் முடிவு: நாட்டு மக்களுக்கு அபாய எச்சரிக்கை- எஸ்.ஆர்.பி.
திருச்சி:
குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கவலை தருவதாக உள்ளது என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி, மதச்சார்பின்மை வாதிகளுக்கு கவலை தருவதாகஉள்ளது. இந்த வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மத வெறியைத் தூண்டி விட்டு வன்முறை மூலம் கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றியை ஜனநாயகத்திற்கும்,நாட்டுக்கும் விடப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.
இருப்பினும், மதச்சார்பின்மை கட்சிகள், சக்திகள் இனியாவது ஒருமித்த கருத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதை உணர வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை. சாத்தான்குளம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாகபோட்டியிடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தகுதி வாய்ந்த வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்தத் தேர்தலில் திமுகவின் ஆதரவை நாங்கள் கோர மாட்டோம் என்றார் எஸ்.ஆர்.பி.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications