சென்னை அருகே சர்ச்சில் காணிக்கைப் பணம் கொள்ளை
சென்னை:
சென்னை அருகே உள்ள கொரட்டூர் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் கிறிஸ்துமசையொட்டி ஏழைகளுக்குகொடுப்பதற்காக வசூலித்து வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
கொரட்டூர் பகுதியில் தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான சர்ச் உள்ளது. இந்த சர்ச்சில் கடந்த ஆண்டு ஏப்ரல்மாதம் ஈஸ்டர் பண்டிகை சமயத்தில் காணிக்கைப் பணம் திருடப்பட்டது. அந்தத் திருட்டு தொடர்பாக யாரும்இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீடு வீடாகச் சென்று பாடல்கள் (கேரல்ஸ்) பாடி காணிக்கைப்பணம் வசூல் செய்யப்பட்டது.
ஏழைகளுக்குக் கொடுப்பதற்காக இந்த காணிக்கை பணம் வசூல் செய்யப்பட்டது. இந்தப் பணம் சர்ச்அலுவலகத்தில் உள்ள ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், நேற்று இரவு சில அடையாளம் தெரியாத நபர்கள் சர்ச்சிற்கு வந்தனர். சர்ச் காவலாளியைமிரட்டி அவர் இருந்த அறையில் வைத்துப் பூட்டினர்.
பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிக் காண்டுதப்பினர்.
இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை திருடியவர்களே இந்தமுறையும் திருடியிருக்கலாம் என்று சர்ச் நிர்வாகிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த முறையாவது திருடர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிப் பிடிக்க வேண்டும் என்று சர்ச் நிர்வாகிகள்கோரிக்கை விடுத்தனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications