பவானி ஆற்றில் கேரளா அணை கட்ட கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"தினமலர்" பத்திரிகை தலைமை நிருபரான கோபால்ஜி இது தொடர்பாக பொது நலன் மனுவைத் தாக்கல்செய்துள்ளார். தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
பவானி ஆற்றின் குறுக்கே காலி கிராமத்தில் தடுப்பு அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் 5 லட்சம் ஏக்கர் பாசன நிலம்,குடிநீர் தேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இரு மாவட்டங்களும் வறண்டு போகும். சுமார் ஒரு கோடிமக்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மேல் பவானி என்ற இடத்தில் இந்த ஆறு உற்பத்தியாகி 12 சிறு நதிகளோடு கலந்துசிறுவானி, பவானி, குண்டா என்ற பெயர்களில் கேரளாவுக்குள் பாய்கிறது.
அங்கு 30 கிலோமீட்டர் தொலைவிற்கு ஓடும் இந்த நதி பின்னர் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடப்பள்ளிஎன்ற இடத்தில் நுழைகிறது. அங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு இந்த நதி பாய்கிறது. பின்னர் ஈரோடு மாவட்டம்வழியாகப் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.
பவானி ஆற்றை நம்பி ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழில் நிறுவனங்களும் உள்ளன. இருமாவட்டங்களின் குடிநீர்த் தேவைகளும் பவானி ஆற்றை நம்பித்தான் உள்ளன.
இந்த அடிப்படை விஷயத்தை மறைத்து விட்டு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுதிட்டமிட்டுள்ளது. எனவே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது மனுவில் கோபால்ஜி கூறியுள்ளார்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications