வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் செய்ய உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசுத் துறைகளில் லோக் அதாலத் என்ற குற்றவியல் நடுவர் மன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை குறையும். அதனால் வக்கீல்களுக்கு பிழைப்பு அடிபடும். இதைக் கண்டித்துநாளை தேசம் முழுவதும் போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந் நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி பட்நாயக் தலைமையிலான 5 நபர் பெஞ்ச் இந்த மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள்கூறியதாவது:
வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதும், நீதிமன்றங்களை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுப்பதும்சட்ட விரோதமானது. வேலை நிறுத்தம் செய்ய வழக்கறிஞர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. போராட்டத்தில் பங்கேற்காதவழக்கறிஞர்களை தண்டிக்கவும் பார் கவுன்சிலுக்கு உரிமை இல்லை.
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் வழக்கு நடத்தும் மனுதாரர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறுபாதிக்கப்படுவோருக்கு வழக்கறிஞர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதே போல நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதால்நீதிமன்றத்துக்கும் வழக்கறிஞர்கள தான் நஷ்டஈடு தர வேண்டும்.
வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்கள் நடத்தும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் இனி ஒத்தி வைக்காது. இனிமேல் போராட்டம் நடத்தும் முன் மாவட்ட நீதிபதியிடம் வழக்கறிஞர் சங்கங்கள் முன் அனுமதி பெற வேண்டும். மிக மிகமுக்கியமானதாக இருந்தால் மட்டுமே வேலை நிறுத்தம் செய்யலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால், வேலை நிறுத்தத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துவிட்டதாலும் இப்போது அதை வாபஸ் வாங்கக் கூட போதியஅவகாசம் இல்லாததாலும் நாளைய வேலை நிறுத்தம் நிச்சயம் நடக்கும் என இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications