செக்ஸ் படங்கள் ஓட்டும் மதுரை இன்டர்நெட் மையங்கள்
மதுரை:
மதுரையில் ஆபாச படங்களைக் காட்டி பணம் வசூலித்து வந்த இன்டர்நெட் மைய உரிமையாளர்கள் 2 பேரைப்போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை சின்ன சொக்கிகுளத்தில் "ஜி-நெட்" என்ற இன்டர்நெட் பிரவுசிங் மையம் உள்ளது. இந்த மையத்தைகோபிகிருஷ்ணன் என்பவரும் அவரது தம்பி கணேசன் என்பவரும் சேர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இந்த மையத்தில் அளவுக்கு அதிகமாக இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வந்தது. இதனால் சந்தேகமடைந்தசிலர் போலீஸ் கமிஷனர் சூரிய பிரசாத்துக்கு புகார் கொடுத்தனர்.
இதையடுத்து தல்லாகுளம் உதவி போலீஸ் கமிஷனர் ஹேமா பிரமிளாவிடம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்கமிஷனர்.
ஹேமா பிரமிளா தலைமையில் "ஜி-நிெட்" சென்டருக்கு விரைந்த போலீஸார் அங்கு அதிரடி சோதனைமேற்கொண்டனர்.
அப்போது அங்கு பல்வேறு ஆபாச வீடியோக்களை கம்ப்யூட்டர்களில் டெளன்லோட் செய்து வைத்து அதைக்காட்டி இளைஞர்களிடம் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதுதவிர நடிகைகளின் ஆபாச படங்களைசி.டிக்கள் மூலம் படம் போட்டுக் காட்டியும் வசூல் வேட்டை நடந்துள்ளது.
அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் ஏராளமான ஆபாச படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததும்கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் படங்களைப் பார்ப்பதற்காக கோபிகிருஷ்ணனும் கணேசனும் கால் மணி நேரத்திற்கு ரூ.100 வரைவசூலித்து வந்துள்ளனர்.
கல்லூரிப் பெண்களுக்காக சிறப்பு நேரங்களையும் இவர்கள் ஒதுக்கியுள்ள திடுக்கிடும் தகவலும் விசாரணையில்தெரிய வந்தது. இதன் மூலம் பெண்களுக்கும் ஆபாச படங்களைக் காட்டியிருக்கலாம் என்று போலீஸார்சந்தேகப்படுகின்றனர்.
இதுதொடர்பாக கோபி கிருஷ்ணனும் தம்பி கணேசனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
இதேபோல் மேலும் பல்வேறு பிரவுசிங் சென்ட்டர்களிலும் பலான படங்களைக் காட்டி பண வசூல் நடந்துகொண்டிருப்பதாகப் போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிரடி சோதனைகள் மூலம் மேலும் பல பிரவுசிங் சென்ட்டர்கள் பிடிபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போதைய கைதுகளைத் தொடர்ந்து, இந்தத் "தொழிலை" நடத்தி வந்த சில இன்டர்நெட்உரிமையாளர்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
மதுரையில் வட்டிக் கடை வைத்திருந்த பலரும் இப்போது இன்டர்நெட் கபே ஆரம்பித்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications