மதுரை அருகே காலரா: அதிகாரிகளின் அலட்சியத்தால் 7 பேர் பலி
மதுரை:
மதுரை அருகே முத்தப்பன்பட்டி என்ற கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலரா நோய் காரணமாக 7பேர் பலியாகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது முத்தப்பன்பட்டி. இந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதமாக ஒன்றியமேல் நிலை நீர்த் தொட்டி மூலம் விநியோகமாகும் குடிநீர் சுத்தமில்லாமல், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் 7 பேர் வரை காலரா மற்றும் வாந்தியால் உயிரிழந்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து குடிநீர்த் தொட்டியையும், குடிநீர் இணைப்புகளையும்சோதனையிட்டுச் சென்றனர். ஆனால், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் இப் பகுதியில் வாந்தியும், வயிற்றுப்போக்கும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதைத் தொடர்ந்துஇந்தக் குடிநீரைப் பயன்படுத்தவே மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆனால், வேறு வழியில்லாததால் அதைத் தான்பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இந்தத் தண்ணீரைக் குடித்து வருகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.இனியாவது அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications