தினகர் மீது "நக்கீரன்" கோபால் அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் மீது "நக்கீரன்" பத்திரிக்கை ஆசிரியரான கோபால் அவதூறு வழக்குத்தொடர்ந்துள்ளார்.

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பின்போது வீரப்பனுக்கு அனுப்பப்பட்ட ரூ.1 கோடி பணத்தை, "நக்கீரன்" கோபால்திருடிக் கொண்டார் என்று தன்னுடைய புத்தகத்தில் தினகர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கோபால் குறித்து பலவிதமான விமர்சனங்களையும் அந்தப் புத்தகத்தில் தினகர் கூறியிருந்தார்.

இதையடுத்து தனது கெளரவம் பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறி சென்னை எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்கோர்ட்டில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் கோபால்.

தினகர் தவிர புத்தகத்தை வெளியிட்ட நிறுவனமும் இதில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் வீரப்பனுக்கு கர்நாடக அரசு ரூ.20 கோடி வரை கொடுத்திருப்பதாகத் தன்னுடையபுத்தகத்தில் தினகர் கூறியிருந்தார். மேலும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உள்ளிட்ட 100க்கும் அதிகமானவர்கள்மீது இந்தப் புத்தகத்தில் சராமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார் அவர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+