வைகோவின் காவல் நீட்டிப்பு: படம் எடுக்க நிருபர்களுக்கு தடை- போலீஸ் அடாவடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு 160 நாட்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யாத போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். விரைவில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட வைகோவைப் படம் பிடிக்க பத்திரிக்கைபுகைப்படக் கலைஞர்களையும், தொலைக் காட்சி கேமராமேன்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும்நிருபர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நிருபர்களுக்கு ஆதரவாகப் பேசிய மதிமுகவினரை போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள வைகோவை காவல் நீட்டிப்புக்காக போலீசார் பூந்தமல்லிநீதிமன்றம் கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த நீதிமன்றத்தில் வைகோவை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகேமராமேன்கள் படம் எடுப்பது வழக்கம்.

தடுக்கப்பட்ட நிருபர்கள்:

வழக்கம்போல் இன்றும் அனைத்து தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி தொலைக்காட்சி, பத்திரிக்கை நிருபர்களும்,கேரமாமேன்களும் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் குவிந்தனர்.

அப்போது வழக்கத்தைவிட அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இந் நிலையில் வேலூரில் இருந்துவைகோவை ஏற்றி வந்த போலீஸ் வேன் பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நுழைந்தது.

இதையடுத்து அவரைப் படம் பிடிக்க கேமராமேன்களும் உடன் நிருபர்களும் உள்ளே சென்றனர். அப்போது அனைவரையும்அங்கிருந்த போலீசார் தடுத்தனர். எங்கள் கடைமையைச் செய்ய விடாமல் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியநிருபர்கள் மீறி உள்ளே நுழைந்தனர்.

முகத்தை திருப்பிய போலீஸ்:

அப்போது நிருபர்களைப் பிடித்து போலீசார் தள்ளினர். இதையடுத்து சில அதிகாரிகள் ஓடி வந்தனர். நிருபர்கள் மட்டும் உள்ளேபோகலாம். கேமராமேன்கள் போக முடியாது என்றனர்.

கேமராமேன்களுக்கு நீதிமன்றம் ஏதும் தடை விதித்திருக்கிறதா அல்லது முதல்வர் அல்லது டி.ஜி.பி. இந்த உத்தரவைபிறப்பித்தனரா என்று நிருபர்கள் கேட்க அதற்கு போலீசார் பதிலே சொல்லவில்லை. திரும்பி நின்று கொண்டனர். ஏன் சார் வாயைமூடிக்கிட்டீங்க, பேசுங்க சார் என்று நிருபர்கள் கேட்டபோது வெறுமனே முறைத்தபடி நின்றிருந்தனர்.

மதிமுகவினருக்கு அடி:

அப்போது அங்கு திரண்டிருந்த மதிமுகவினர், எங்கள் தலைவரை படம் பிடிக்க விடாமல் தடுப்பது ஏன் என்று போலீசாரின்கேட்டனர். உடனே போலீசார் நிருபர்கள் மீது இருந்த கடுப்பை எல்லாம் மதிமுகவினர் மீது காட்டினர். அவர்கள் அடித்துத்தள்ளினர்.

போலீசாரின் இந்த அடாவடியையும் மீறி நிருபர்கள் நீதிமன்றத்துக்குள் சென்றுவிட்டனர்.

அங்கே நீதிபதி முன் வைகோவும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பிற 8 மதிமுகவினரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அரசு வக்கீல் ஜெயக்குமார், வைகோ மற்றும் மதிமுகவினரின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரி மனுக் கொடுத்தார்.

கடுப்பான நீதிபதி: போலீசாருக்கு எச்சரிக்கை

இதைப் பார்த்து கோபமடைந்த நீதிபதி ராஜேந்திரன், ஒவ்வொரு தடவையும் வைகோவை இங்கே கொண்டு வந்து காவல்நீட்டிப்பைத் தான் கேட்கிறீர்கள். இன்றோடு அவரது சிறைக் காவல் 160 நாட்களைத் தாண்டிவிட்டது. ஆனால், நீங்கள் (அரசுத்தரப்பு) குற்றப்பத்திரிக்கை எதையும் தாக்கல் செய்யும் வழியைக் காணோம் என்றார்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்கள், சில முக்கிய சாட்சிகள் தலைமறைவாகிவிட்டதால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதுதாமதமாகி வருகிறது என்றார்.

ஆனால், அவரை இடைமறித்துப் பேசிய நீதிபதி, இந்த கைது விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கிறது. பொடா சட்டத்தில்வைகோ கைது செய்யப்பட்டுள்ளது அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ள நிலையில், இந்த வழக்கைஇப்படித்தான் கையாள்வதா?. அரசுத் தரப்பில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டாமா?.

மிக விரைவில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து வைகோ மற்றும் எட்டு பேரின் காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

டி.ஜி.பியின் கோபம்:

டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்து வரும் போலீசார் குறைகேட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசார் இது சும்மாகண்துடைப்புக்கு நடக்கும் நிகழ்ச்சி என்று கூறினர். இது குறித்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இதையடுத்துநிருபர்களுடன் போலீசாரை பேச அனுமதித்த டி.ஜி.பி. அலுவலக போலீசாருக்கு மெமோ அனுப்பப்பட்டது. இந்தக் கடுப்பில் தான்வைகோவை படம் எடுக்க விடாமல் நிருபர்களைத் தடுக்கச் சொல்லி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகத்தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+