கொள்ளையர்களை ஏமாற்றிய பூட்டுக்கள்!

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

பரமக்குடி நகரில் ஒரே பகுதியில் அமைந்துள்ள 8 கடைகளில் திருட முயற்சி நடந்தது. ஆனால் ஒரு கடையின்பூட்டும் கூட உடையாததால் கொள்ளையர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

பரமக்குடி முஸ்லீம் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 10 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு நள்ளிரவில் சிலதிருடர்கள் வந்து அவற்றின் பூட்டுக்களை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். ஆனால் ஒரு கடையின் பூட்டையும்அவர்களால் உடைக்க முடியவில்லை.

அவர்களது விடா முயற்சியின் பலனாக ஒன்பதாவதாக இருந்த கடையின் பூட்டை உடைத்து விட்டனர். ஆனால்அங்கும் அவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது.

அந்தக் கடையில் பணம் ஏதும் வைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் கடுப்பாகிப் போன கொள்ளையர்கள் அங்குவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு நம்பர் பிளேட் எழுதும் சாதனங்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றிற்குத் தீவைத்தனர்.

இதையடுத்து மஞ்சூர் என்ற பகுதிக்கு சென்ற திருடர்கள் அங்கிருந்த கனரா வங்கியின் கதவை உடைத்து உள்ளேபுகுந்தனர்.

ஆனால் பணத்தைத் திருடினால் அபாய மணி அடிக்குமே என்ற பயத்தால், கைக்கு எட்டியம், வாய்க்கும் எட்டாதகோபத்தில் அங்கிருந்த ரூ.10,000 மதிப்புள்ள ஜெனரேட்டரை திருடிக் கொண்டு கொள்ளையர்கள் தப்பினர்.

பரமக்குடி போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+