பரிசல்களை பறித்த கர்நாடக அதிரடிப்படை: ஆற்றை கடக்க முடியாமல் தமிழர்கள் அவதி
கோபிநத்தம் (வீரப்பனின் கிராமம்):
வீரப்பனின் அட்டூழியத்தால் சேலம், தர்மபுரி மாவட்டங்களை ஒட்டியுள்ள கர்நாடக காட்டுப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானதமிழர்கள் ஆற்றைக் கூட கடக்க முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த கிராம மக்களின் பரிசல்களை கர்நாடக அதிரடிப்படையினர் லாரிகளில் அள்ளிப் போட்டுச் சென்றுவிட்டதால்பெரியவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளத்தூர், ஆத்தூர், கோபி நத்தம், கொளத்தூர் ஆகிய கர்நாடக எல்லைப் பகுதி கிராமங்களில் வசிப்பவர்களில்பெரும்பாலானவர்கள் தமிழர்கள் தான். இந்த கிராமங்கள் கர்நாடக அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.
வனத்தை ஒட்டி அமைந்துள்ள குளத்தூரில் காவிரி நதியைக் கடந்தால் தான் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். ஆற்றைக் கடக்கஇங்கு பாலம் ஏதும் கிடையாது. பரிசல்கள் தான் ஒரே வழி.
ஆனால், சில நாட்களுக்கு முன் இங்கு வந்த கர்நாடக அதிரடிப்படையினர் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி அங்கிருந்தபரிசல்களை எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும் மாலை 6 மணிக்கு மேல் இப் பகுதி கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேவரக் கூடாது எனவும் தடை விதித்துள்ளனர். காடுகளில் சென்று விறகு பொறுக்கவும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள இப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிசலும் இல்லாததால்ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சிறுவர்களும் ஆண்களும் மட்டுமே ஆற்றை நீந்திக் கடந்து சென்று வீடுகளுக்குவேண்டியதை வாங்கி வருகின்றனர்.
குழந்தைகளும் பெண்களும் வீடுகளை விட்டு வெளியே செல்லவே இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பரிசல்இல்லாததால் இவர்கள் தர்மபுரி அல்லது சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளை அடைய வேண்டுமானால் காட்டுக்குள் 20 கி.மீ.பயணிக்க வேண்டும்.
ஒரு பக்கம் வீரப்பன் தொல்லை மறுபக்கம் அதிரடிப்படையின் தொல்லை என இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி இந்தப் பகுதிமக்கள் சிக்கித் திணறி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications