"போலாரிஸ்" நிறுவன தலைவரை விடுவித்தது இந்தேனேஷியா
டெல்லி:
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட சென்னையின் "போலாரிஸ் சாப்ட்வேர் லேப்ஸ்" நிறுவனத் தலைவர்அருண் ஜெயின் இன்று விடுதலை செய்தனர்.
அருண் ஜெயினையும் அவருடன் இந்தோனேஷியா சென்றிருந்த போலாரிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியானவிஜய் மல்ஹோத்ராவையும் விடுதலை செய்த இந்தோனேஷிய போலீசார் ஜகார்தாவில் உள்ள இந்தியத்தூதரகத்தில் அவர்களை ஒப்படைத்தனர்.
ஆனால் அவர்களுடைய பாஸ்போர்ட்டு இன்னும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஓரிருநாட்கள் கழித்து பாஸ்போர்ட் மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் இந்தியாதிரும்புவார்கள்.
"பேங்க் ஆர்த் கிரஹா" என்ற இந்தோனேஷிய வங்கிக்கு சாப்ட்வேர் வழங்க "போலாரிஸ்" நிறுவனம் 1.1 மில்லியன்டாலர் மதிப்புக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலையில் கையெழுத்தானது.இதையடுத்து அதற்கான சாப்ட்வேரை போலாரிஸ் நிறுவனம் எழுத ஆரம்பித்தது. இந் நிலையில் திடீரெனதங்களுக்கு அந்த சாப்ட்வேர் வேண்டாம் எனவும் பணத்தைத் திருப்பித் தருமாறும் அந்த வங்கி நோட்டீஸ்அனுப்பியது.
ஆனால், இதற்காக ஏகப்பட்ட செலவு செய்துவிட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என போலாரிஸ்கூறிவிட்டது. அல்லது 0.66 மில்லியன் டாலர் பணம் மட்டுமே திருப்பித் தர முடியும் என்றும் போலாரிஸ் கூறியது.ஆனால் அந்த வங்கியோ 1 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று வற்புறுத்தியது.
இந்த விவகாரத்தைப் பேசித் தீர்க்கச் சென்ற அருண் ஜெயினையும் ராஜிவ் மல்ஹோத்ராவையும் வங்கி அதிகாரிகள்அடைத்து வைத்துவிட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரும் அந்த வங்கி கொடுத்த புகாரைவாங்கிக் கொண்டு அருண் ஜெயினை சிறையில் அடைத்துவிட்டனர்.
மிகத் தவறான முறையில், நியாயமற்ற வகையில் அருண் ஜெயின் கைது செய்யப்பட்டது இந்தியாவில் பலதரப்பிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரமாக அவர்கள் ஜகார்தா சிறையில் இருந்தனர். இதில்அருண் ஜெயினின் உடல் நிலை சிறையில் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ உதவியும்தேவைப்பட்டது. இதையடுத்து அவரை கொஞ்சம் சுகாதாரமான சிறை அறைக்கு மாற்றினர்.
அருண் ஜெயின் கைதுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்ததால் இந்த விவகாரத்தில் இந்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜனும் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும்தலையிட்டனர்.
இன்று மாலைக்குள் அருண் ஜெயின் விடுதலை செய்யப்படாவிட்டால் இந்தோனேஷிய அதிபர் சுகர்னோபுத்ரிடம்பிரதமர் வாஜ்பாயே நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதற்குள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்தோனேஷியஅரசு அருண் ஜெயினை விடுவிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து தான் இன்று காலை அருண் ஜெயின் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது கிரிமினல் குற்றம்எதுவும் சுமத்தப்படவில்லை என்று மகாஜன் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அருண் ஜெயினை விடுவிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசுக்கு போலாரிஸ்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications