திருமணத்துக்கு மறுத்த மாமன் மகளுக்கு கத்திக்குத்து: இளைஞர் தற்கொலை
சென்னை:
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த மாமன் மகளையும், வேறு 3 பெண்களையும் கத்தியால் குத்திய இளைஞர்பின்னர் மின்சார ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியச்ை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன்கள் புகழேந்தி மற்றும் செல்வம்.
மாசிலாமணியின் வீட்டிலேயே செல்வத்தின் தாய்மாமன் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். அவருக்கு மனைவி கெளரி, மகள்கள் ராணி மற்றும் மாலதி ஆகியோர் உள்ளனர்.
ராணியை செல்வம் சில காலமாகக் காதலித்து வந்தார். முதலில் அதற்கு சம்மதித்த ராணி, பின்னர் செல்வம் சரியாகவேலைக்குப் போகாமல் ஊர் சுற்றி வந்ததால் காதலை மறுத்து விட்டார்.
ஆனால் கட்டினால் ராணிதான் என்று விடாப்பிடியாக அவரையே சுற்றி வந்து கொண்டிருந்தார் செல்வம். ஆனால்ராணி அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.
இதையடுத்து தனது வீட்டிலும், தாய்மாமன் வீட்டிலும் ராணியை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு செல்வம்கேட்டுள்ளார். ஆனால் இரு குடும்பத்தினருமே இதற்கு மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்றும் இது தொடர்பாகப் பேச்சு எழுந்து, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்தசெல்வம் தன்னிடமிருந்த கத்தியால் கெளரி, ராணி, மாலதி, புகழேந்தியின் மனைவி வள்ளி ஆகியோரைசரமாரியாகக் குத்தினார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய செல்வம் நேராக ராயபுரம் சென்றார். அங்கு மின்சார ரயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த 4 பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications