அண்ணா பல்கலை. கேள்வித்தாள் "அவுட்": சிக்குகிறது நெல்லை கல்லூரி
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழகத்தின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளையும் சேர்ந்த பி.இ. மற்றும்பி.டெக் மாணவர்களுக்கான மெக்கானிக்ஸ் தேர்வுக்கான கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியானது. இதையடுத்து அந்ததேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
திருநெல்வேலி அருகே ஒரு கல்லூரியில் முதலில் லீக் ஆன இந்த கேள்வித் தாள்கள் தமிழகத்தின் பிற கல்லூரி மாணவர்களுக்குபேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மூத்த பேராசிரியர்தலைமையில் 3 அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் சமீபத்தில் தான் இணைக்கப்பட்டன.இதன் பிறகு நடக்கும் முதல் செமஸ்டர் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 227 பொறியியல் கல்லூரிகளிலும் முதல் செமஸ்டர தேர்வுகள் நடந்து வருகின்றன, நேற்றுகாலை மெக்கானிஸ் தேர்வு நடக்க இருந்தது. 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், கேள்வித்தாள்கள் நேற்றே அவுட் ஆகி விட்டதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்குதகவல்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழ பதிவாளர் கணபதி அறிவித்தார். மறு தேர்வுவிரைவில் நடைபெறும் என்றும் இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்றை துணைவேந்தர் பாலகுருசாமி அமைத்துள்ளார் என்றும்கணபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நடந்த இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளிலும் கூட
கேள்வித்தாள் லீக் ஆனதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேக்ஸ் மூலம் பரவிய கேள்வித் தாள்:
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் திருநெல்வேலி அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் தான் இந்தக்கேள்வித் தாள்கள் வெளியானதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் கேள்விக் தாள்களை மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு இந்தக் கல்லூரிமாணவர்கள் அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவை அடுத்தடுத்து பேக்ஸ் மூலம் மாநிலம் முழுவதுமே பரவியுள்ளன.
துணைவேந்தர் எச்சரிக்கை:
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
இதுகுறித்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. எந்த ஊரிலிருந்து பேக்ஸ்கள் சென்றன. இதன் பின்னணியில்எந்தக் கல்லூரி உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். 3 நாட்களுக்குள் விசாரணைக் குழுவினர் தங்களதுஅறிக்கையைத் தாக்கல் செய்வர்.
அதன் பிறகு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும். எந்தக் கல்லூரியாவதுஇதன் பின்னணியில் இருந்தால் அந்தக் கல்லூரியின் அங்கீகாரமே நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும் கேள்வித் தாள்கள்வெளியாகக் காரணமாக இருந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வரும் என்றார்.
நெல்லை கல்லூரி:
இதற்கிடையே, எந்தக் கல்லூரியிலிருந்து வினாத்தாள் வெளியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.நெல்லை அருகே உள்ள கல்லூரி தான் இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. விரைவில் இக் கல்லூரி மீது நடவடிக்கைவரும்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications