தமிழக ரயில் திட்டங்களுக்காக டெல்லியில் ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகள்
டெல்லி:
தமிழகத்தின் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும்,அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒன்று சேர்ந்து மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒற்றுமையாக செயலில் இறங்கியது இது தான் முதன்முறையாகும். காவிரிவிவகாரத்தில் கூட இவர்கள் ஒன்று சேர்ந்தது இல்லை.
ஆனால், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உண்மையாகவே கடுமையாகஉழைப்பதால் அவரது முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒன்று சேர்ந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த திமுக, மதிமுக, பா.ம.க. மத்திய அமைச்சர்களும் இந்த எம்.பிக்களுடன் இணைந்து ரயில்வே அமைச்சர்நிதிஷ்குமாரைச் சந்தித்தனர். அவரிடம் இந்தக் குழுவினர் தந்த மனுவின் விவரம்:
கரூர்- சேலம் மற்றும் பெங்களூர்- சாந்தமங்கலம் இடையிலான ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்.
சிறப்பு ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை- மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்யக் கூடாது. அந்த ரயிலைதொடர்ந்து இயக்க வேண்டும். அதே போல சென்னை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயிலையும் நிரந்தரமாக்கவேண்டும்.
திருச்சி- மதுரை, மதுரை- திருநெல்வேலி ஆகிய நகர்களுக்கு இடையிலான ரயில் பாதையை இரட்டைப் பாதையாக்க வேண்டும்.
கன்னியாகுமரி- ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை விரிவுபடுத்த வேண்டும். அந்த ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும்.
ஹைதராபாத்- சென்னை இடையிலான ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சியினரும்சேர்ந்து வந்து இந்த கோரிக்கையை வைத்ததால் அதை நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிதிஷ்குமார்உறுதியளித்தார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications