அரசியல் நிலவரம்: ஜனவரி 12ல் கூடுகிறது திமுக செயற்குழு
சென்னை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் ஜனவரி 12ம் தேதி சென்னையில்நடைபெறுகிறது.
சமீபத்தில் தான் அதிமுகவின் பொதுக் குழுவும் செயற்குழுவும் கூடியது. அதில் இந்துக்கள் குறித்த விமர்சித்ததாககருணாநிதி மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவரைக் கைது செய்யவும் பொதுக் குழு பரிந்துரைத்தது.
இந் நிலையில் திமுகவின் செயற்குழு கூடுகிறது. சாத்தான்குளம் இடைத் தேர்தல், சென்னை மேயர் தேர்தல்,பா.ஜ.கவுடன் இருந்து வரும் தாமரை இலை மேல் நீர்த் துளி போன்ற ஒட்டியும் ஒட்டாத கூட்டணி, மாறனுக்குபதிலாக வேறு ஒருவரை மத்திய அமைச்சராக்குவது ஆகியவை குறித்து அக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படஉள்ளன.
இதுகுறித்து கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் வரும் 11ம் தேதிகாலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்றுஅறிவித்துள்ளார்.
பாமக செயற்குழு, பொதுக்குழு:
அதிமுகவைத் தொடர்ந்து திமுகவும் தனது செயற் குழுக் கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் பாட்டாளி மக்கள்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களும் வரும் 31ம் தேதி திண்டிவனத்தில் நடைபெறுகின்றன.
கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வீடு உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.வரும் 31ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு வரை பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. கட்சித் தலைவர் ஜி.கே.மணிவெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications