ரயில் விபத்து: நக்சலைட்டுகளின் சதி வேலையே காரணம்
ராமலிங்கப்பள்ளி (ஆந்திரா):
நேற்று முன் தினம் இரவு ஹைதராபாத்- பெங்களூர் ரயில் விபத்துக்குள்ளானதற்கு சதி வேலை தான் காரணம் என உயர் ரயில்வேஅதிகாரி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த ரயில் சென்ற தண்டவாளம் வெட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அருகே 5பெரிய ரம்பங்களும் (hacksaw blades) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த விபத்துக்கு சதி வேலை தான் காரணமாக இருக்கும் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இந்த ரயில் தடம் புரண்டது. நூறு கி.மீ. வேகத்தில் தூக்கி எறியப்பட்ட பெட்டிகளில் இருந்த 20 பேர்பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இது குறித்து உடனே விசாரணையும் தொடங்கியது. விசாரணை நடந்து வரும் நிலையில் இவ் விபத்து குறித்து தென் மத்தியரயில்வே பொது மேலாளர் எஸ்.எம். சிங்க்லா நிருபர்களிடம் கூறியதாவது:
இது நக்சலைட்டுகளின் திட்டமிட்ட சதி என்று தான் நினைக்கிறோம். தண்டவாளத்தை வேண்டுமென்றே வெட்டியிருக்கிறார்கள்.மேலும் வெட்டப்பட்ட இடத்தில் இரும்புத் துகள்களும் மிகவும் பொடியாக மாவு மாதிரி கிடந்தது. இதனால் அது ரம்பத்தால்அறுக்கப்பட்டது உறுதியாகிறது.
தண்டவாளம் வேறு காரணத்தால் உடைந்தால் இது போன்ற இரும்புத் துகள்கள் இருக்காது. பெரிய துண்டுகள் தான் இருக்கும்.மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே 5 ரம்பங்களும் சிக்கியுள்ளன.
நாங்கள் சொன்ன தகவல்களை வைத்து இது நக்சலைட்டுகளின் வேலையாகத் தான் இருக்கும் என போலீசார் கருதஆரம்பித்துள்ளனர். மேலும் தண்டவாளத்தை வெட்டிய இடத்தில் துணியையும் போட்டு மறைந்துள்ளார்கள். இதனால் ரயிலின்டிரைவருக்கும் வெட்டப்பட்டது தெரியாமல் போய்விட்டது.
நேற்று சம்பவ இடத்துக்குக் கொண்டு வரப்பட்ட மோப்ப நாய்கள் ஒரு கிணற்றை நோக்கி ஓடின. இதனால் அந்தக் கிணற்றையும்போலீசார் முழுமையாக சோதனையிட வேண்டும். நேற்றிரவே உடைந்த தண்டவாளத்தை நாங்கள் சரி செய்திருக்க முடியும்.ஆனால், அங்கு தடயவியல் வல்லுனர்களைக் கொண்டு சோதனை நடத்த போலீசார் முடிவு செய்ததால் தண்டவாள சீரமைப்புப்பணியை நிறுத்திவிட்டோம்.
போலீசார் அனுமதி தந்த பின்னர் தான் தண்டவாளத்தை சீரமைப்போம் என்றார் சிங்க்லா.
அதே நேரத்தில் போலீசாரின் உளவுப் பிரிவினருக்கும் இது நக்சலைட்டுகளின் செயலாக இருக்கலாம் என்பதற்கான சிலதகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக தண்டவாளம் தரக் குறைவாக இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதைரயில்வே துறையின் பாதுகாப்புக் கமிட்டி ஆணையர் அகர்வால் மறுத்தார். இது அரசியல் உள் நோக்கம் கொண்ட, கேவலமானகுற்றச்சாட்டு என அவர் கூறினார்.
இந் நிலையில் செகந்திராபாத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் இன்று சம்பவ இடத்தில் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.அறுக்கப்பட்டதால் உருவானதாகக் கருதப்படும் தண்டவாளத்தின் தூள்களை நிபுணர்கள் சேகரித்துள்ளனர். இதில் வேதியியல்சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் தான் உண்மையிலேயே தண்டவாளம் அறுக்கப்பட்டதா என்பது உறுதியாகும்.
இதற்கிடையே விபத்தில் பலியான 20 பேரில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவை வுறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
-->
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications