தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரிப்பு: சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
சென்னை:
தமிழகத்தில் இஸ்லாமிய மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிர்ச்சியூட்டும் வகையில்அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் சுமார் 18 இஸ்லாமிய தீவிரவாதிகளும், 25 நக்சலைட்டுகளும், 15க்கும்மேற்பட்ட தமிழ்த் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர். போலீசாரின் செயல்பாடின்மையும் உளவுப் பிரிவினரும் தோல்வியும்தான் தமிழகத்தில் தீவிரவாதிகள் இந்த அளவுக்கு செயல்பட ஆரம்பித்திருப்பதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
பிடிபட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவே ஆகும். பிற மாநிலங்களில் போலீசாரின்கண்காணிப்பு அதிகரித்துவிட்டதால் தமிழகம் தான் தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறிவருகிறது.
இந் நிலையில் இன்று நிருபர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தீவிரவாதிகளின் நடமாட்டம் கவலைதருவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாகவும் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்கிவிட்டது. இதை போலீஸ்அதிகாரிகள் அளிக்கும் பேட்டிகளும் அறிக்கைகளுமே உறுதி செய்கின்றன. தினசரி தீவிரவாதிகள் பிடிபடுவதாகசெய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதால் தான் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. இது மிகவும்கவலை தருவதாக உள்ளது. பொதுமக்கள் கோவிலுக்கும் பொது இடங்களுக்கும் கூட பயமின்றி செல்ல முடியாதஅவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது. மக்கள் பீதியுடன் தான் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத்தில் மதவாதத்துக்கு வெற்றி கிடைத்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க. இந்துத்துவாகொள்கைகளை தேசிய அளவில் கடை பிடித்தால் கூட்டணியைவிட்டு விலகுவோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவது அதிகரித்துவருகிறது. இதற்கான காரணத்தை ஆட்சியாளர்கள்தான் கூற வேண்டும் என்றார் கருணாநிதி.
-->
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications