வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 4 தமிழ் தீவிரவாதிகள் கைது
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் ஸ்டேட் வங்கியின் கேசியர் விஸ்வநாதனைக் கொன்றுவிட்டு பணத்தைக்கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பெசன்ட் நகர் 16வது கிராசில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் காலையில் இந்த சம்பவம்நடந்தது.
கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற கேசியர் விஸ்வநாதனை கொள்ளையர்கள் கத்தியால் குத்திக் கொன்றனர்.பின்னர் வங்கியின் லாக்கர் அறைக்குள் நுழைந்து பணத்தைத் திருட முயன்றபோது எச்சரிக்கை மணி ஒலித்தது.இதையடுத்து கொள்ளை முயற்சியைக் கைவிட்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வடபழனியில் சிலநாட்களுக்கு முன் தமிழர் விடுதலைப் படை தலைவர் ராஜாராம் கைது செய்யப்பட்டார்.
அவருக்கும் இந்தக்கொள்ளை முயற்சியில் தொடர்புண்டு. இவரிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளையில்தொடர்புடைய பிறரது விவரங்களைக் கொடுத்தார்.
இதையடுத்து தாம்பரத்தில் பதுங்கியிருந்த மணிவண்ணன், ரவிச்சந்திரன், வேலு, வேலு பிரபாகரன் ஆகியநால்வரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேர் தப்பியோடிவிட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்த நான்கு பேரும் தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள். தங்களது அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications