நாளை கிறிஸ்துமஸ்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராம்மனோகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சகோதரத்துவத்தையும், பேரன்பையும் போதித்த ஏசுபிரான்அவதரித்த இந்த புனித நாளில் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதி, அன்பு, நல்லுணர்வு ஆகியவற்றை நாம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ள இந்த தினம் நமக்கு உதவட்டும்.தமிழகத்தில் வாழும் கிருஸ்துவ சமுதாய மக்களுக்கு இந்த தினம் வாழ்வில் திருவொளியை ஏற்றிட இறைவனை வேண்டுகிறேன்என ராம்மோகன் ராவ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நாட்டில் அமைதி தவழட்டும், அன்பு செழிக்கட்டும்,சகோதரத்துவம் ஓங்கட்டும், சுயநலச் சுவர்கள் சரியட்டும் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அநீதியும், கொடுங்கோன்மையும் தன்னை வருத்தியபோதும்,அதை துணிவுடன் எதிர்கொண்டு, அன்பையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியவர் ஏசு பிரான். அந்த மகானின் வழியில்நடக்க அனைவரும் உறுதி பூண வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பல தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
-->


Click it and Unblock the Notifications
