நாகப்பா கொலை: கர்நாடக சட்டசபையில் பெரும் அமளி
பெங்களூர்:
நாகப்பா கொலை தொடர்பாக கர்நாடக சட்டசபையில் இரண்டாவது நாளாக இன்றும் பெரும் அமளி நடந்தது. அவையில்கலாட்டாவில் ஈடுபட்ட 12 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை அவைக் காவலர்கள் தூக்கி வெளியே போட்டனர்.
நேற்று சட்டமன்றம் கூடியவுடன் எதிர்க் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர். நாகப்பா கொலை தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். ஆனால், அதை ஏற்க முதல்வர் கிருஷ்ணா மறுத்தார்.
இதையடுத்து அவைக்குள்ளேயே ஒரு அட்டையில் நாகப்பா கொலைக்கு அரசு தான் காரணம் என்று எழுதி கழுத்தில் தொங்கப்போட்டு ஒரு எம்.எல்.ஏ. கலாட்டா செய்தார். இதையடுத்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டடார். தொடர்ந்துஅவைக்கு வெளியிலும் அவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்படார்.
பெரும் களேபரங்களுடன் நேற்று கூட்டம் முடிந்தது.
இந் நிலையில் இன்று அவை கூடியதும் மீண்டும் நாகப்பா மரண விவகாரம் வெடித்தது. அவை கூடியதும் நாகப்பா கொலைக்குபொறுப்பேற்று முதல்வர் கிருஷ்ணா பதவி விலக வேண்டும் எனவும், இந்தக் கொலையில் தொடர்புடைய அமைச்சர் ராஜூகெளடா பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கோஷம் போட்டனர்.
ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷம் போட்டனர். ராஜூ கெளடா மீது தவறான குற்றச்சாட்டை வைத்துபா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர்.
இதையடுத்து அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
-->


