திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

West Bengal
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜி மீது சோனார்பூர் பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது இன்று மற்றொரு திரிணாமுல் எம்பியான கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த தொடர் தாக்குதலுக்கு பாஜகதான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரசார் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் பகுதியில், வன்முறையில் உயிரிழந்த டிஎம்சி தொண்டர் ஒருவரின் குடும்பத்தினரைச் சந்திக்க அபிஷேக் பானர்ஜி சென்றார். அப்போது அங்கு திரண்ட நூற்றுக்கணக்கானோர், அவருக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, கற்கள், முட்டைகள் மற்றும் காலணிகளை வீசி அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய அபிஷேக், ஒரு கும்பல் தன்னைச் சூழ்ந்து சட்டை மற்றும் கண்ணாடியைக் கிழித்து, செங்கற்களால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். "அதிர்ஷ்டவசமாக நான் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்திருந்ததால் என் தலை தப்பியது, இல்லையெனில் மண்டை உடைந்திருக்கும்; இது பாஜாகவினரின் திட்டமிட்ட கொலை முயற்சி" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த அபிஷேக் பானர்ஜியை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது எனப் புதிய ஆளும் கட்சியான பாஜக தரப்பில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சோனார்பூர் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி மற்றும் செய்தி ஊடக வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தபான் மைட்டி, ஆகாஷ் உள்ளிட்ட 5 உள்ளூர்வாசிகளைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் காரணம்?

மேற்கு வங்கத்தில் பாஜக தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் பாஜகவினரின் வேலைதான் என்று மம்தா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பாஜக அதை அப்படியே மறுத்து வருகிறது. இது மக்களின் அதிருப்தி என்றும், மக்கள் தங்களுக்காக எதையும் செய்யவில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+