விடிந்ததுமே தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்! இன்னசென்ட் திவ்யாவுக்கு என்ன துறை?
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி இன்னசன்ட் திவ்யா கோஆப் டெக்ஸ் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக இருந்த ஜெயசீலன் சுற்றுலாத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயா சிங் புதிய இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது போல் சிவகங்கை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கும், அங்கிருந்த ஆகாஷ் ஐஏஎஸ் சிவகங்கைக்கும் மாற்றப்பட்டார்.

அது போல் விடுப்பில் இருந்த இன்னசென்ட் திவ்யா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராக கவிரா ராமு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநகர போக்குவரத்து கழக இயக்குநராக இருந்த பிரபாகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக மாற்றப்பட்டார். பிரபாகருக்கு பதிலாக சுரங்கத் துறையில் இருந்த மோகன் ஐஏஎஸ் மாநகர போக்குவரத்திற்கு மாற்றப்பட்டார்.
ஈரோடு வணிக வரித் துறை இணை ஆணையர் பொன்மணி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக (திருச்சி) மாற்றப்பட்டார். தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications