விடியல் போச்சு.. இருட்டு வருதா? மகளிர் பஸ் போர்டில் கை வைத்த தவெக! பின்னாடியே விரட்டி தாக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசின் நிர்வாக ரீதியிலான சில பெயர் மாற்ற நடவடிக்கைகள், முந்தைய ஆட்சியின் சாதனைகளை மறைக்கும் முயற்சி என்று திமுகவும், நிர்வாக சீரமைப்பு, திட்ட விரிவாக்க நடவடிக்கை என்று தவெகவும் மாற்றி மாறற் பரஸ்பரம் வாதிட்டு கொண்டிருப்பதால் தமிழக அரசியல் களம் அனலடித்து கொண்டிருக்கிறது.. அந்தவகையில், மகளிர் விடியல் பயண திட்டமும், பல்வேறு விமர்சனங்களையும், விவாதங்களையும் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தியுள்ளது.!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக பொறுப்பேற்றுள்ளது.. ஆனால், முந்தைய திமுக அரசின் திட்டப் பெயர்களையும் மாற்றம் செய்து வருகிறது.. இந்த பெயர் மாற்றம்தான், அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

DMK Slams TVK

"மகளிர் விடியல் பயணம்"

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதுமே, "மகளிர் விடியல் பயணம்" திட்டத்தில் முதல் கையெழுத்தை போட்டு துவங்கி வைத்தார். ஆரம்பம் முதலே இந்த இலவச பஸ் வசதியானது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது

இந்த திட்டத்தின் கீழ் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுமார் 7,200-க்கும் மேற்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணம் செய்தனர்.. இதனால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 62 சதவீதமாகவும் உயர்ந்தது.

நீக்கப்பட்ட விடியல் பெயர்

இந்நிலையில், தவெக அரசு போக்குவரத்துத் துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு நகரப் பேருந்துகளில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் டிஜிட்டல் திரைகளில் இருந்து "விடியல்" என்ற வார்த்தை நீக்கப்பட்டு, "மகளிர் பயணம்" என்று உடனடியாக மாற்றியமைக்க போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்ற முடிவால் பயணிகள் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், இத்திட்டத்தை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டம்

ஏற்கனவே "நான் முதல்வன்" திட்டத்தின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது "விடியல்" வார்த்தை நீக்கப்பட்டிருப்பது புதியதொரு அரசியல் சர்ச்சையை களத்தில் உருவாக்கியுள்ளது.

திமுக தரப்போ கொந்தளித்து விட்டது.. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், "விடியல் பேருந்து பயணத்தில் விடியலை நீக்கி உள்ளனர், நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளனர். இப்போதுள்ள திட்டங்கள் எல்லாம் எங்களுடைய தலைவரால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்.

அதன் பெயரை மட்டும் மாற்றி இவர்களுடைய திட்டம் போல காட்டிக்கொள்ளாம் என கருதுகிறார்களோ என்னவோ, மகளிர் விடியல் பயணத்தில் விடியலை தூக்கியவர்கள், வரும் நாட்களில் "மகளிர் பயணம்" என்ற சொற்களையும் தூக்கிவிட்டு இத்திட்டத்தையே நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் பெண்களிடையே மேலோங்குகிறது! மாற்றம் என்று தவெகவினர் கூறியது பெயர் மாற்றம் தான் போல" என்று தவெக அரசை சாடியுள்ளார்.

திமுக கண்டனம்

இதேபோல், திமுகவின் சோஷியல் மீடியா பிரிவுகளான ஐடி விங், என்ஆர்ஐ விங் போன்றவையும் தவெக அரசை அளவுக்கு அதிகமாகவே சாடியிருக்கின்றன..

மேடைக்கு மேடை மாற்றம் என்று முழங்கிவிட்டு, முந்தைய ஆட்சியின் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் பலகையை மாற்றுவதுதான் தவெக அரசின் சாதனையா?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், விடியல் என்ற வார்த்தையை நீக்குவதில் மட்டும் படுவேகமாக செயல்படுகிறதே? என்று திமுக ஐடி விங் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதைய முதலமைச்சருக்கு "முதல்வர்" என்றால் ஸ்டாலினும், "விடியல்" என்றால் திமுக ஆட்சியும் நினைவுக்கு வருவதால் ஏற்படும் அச்சத்தின் காரணமாகவே "விடியல்" என்ற வார்த்தை நீக்கப்பட்டு வருவதாக திமுக என்ஆர்ஐ விங் விமர்சித்துள்ளது.

கீதா ஜீவன் காட்டம்

அதேபோல, அரசு பேருந்துகளில் "விடியல்" பெயர் நீக்கப்பட்டதற்கு திமுகவின் முன்னணி நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனும் கடுமையாக விமர்சித்து கண்டனம் வெளியிட்டுள்ளார்.

"திமுக அரசு கொண்டு வந்த 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தை 'மகளிர் பயணம்' எனப் பெயர் மாற்றியிருக்கிறது தவெக அரசு. அதிமுக-வின் 10 ஆண்டுகால ஆட்சியால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டுக்கு விடியலை கொடுத்தது நமது திமுக அரசு. தற்போதைய தவெக அரசு, மீண்டும் தமிழ்நாட்டை இருண்ட காலமாக மாற்றப் போவதால் 'விடியல்' என்ற சொல்லை அவர்களாகவே நீக்கியிருக்கிறார்கள் போல..!

தவெக - திமுக மாறி மாறி விமர்சனம்

மகளிர் விடியல் பயணத்தில் விடியலை தூக்கியவர்கள், வரும் நாட்களில் 'மகளிர் பயணம்' என்ற சொற்களையும் தூக்கிவிட்டு இத்திட்டத்தையே நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் பெண்களிடையே மேலோங்குகிறது! மாற்றம் என்று தவெகவினர் கூறியது பெயர் மாற்றம் தான் போல!" என்றெல்லாம் காட்டமாக பதிவிட்டுள்ளர்.

இப்படி தவெக அரசின் இந்த நிர்வாக ரீதியிலான பெயர் மாற்ற நடவடிக்கை, முந்தைய ஆட்சியின் சாதனைகளை மறைக்கும் முயற்சி என்று திமுகவும், நிர்வாக சீரமைப்பு, திட்ட விரிவாக்க நடவடிக்கை என்று தவெகவும் மாற்றி மாறற் பரஸ்பரம் வாதிட்டு கொண்டிருப்பதால் தமிழக அரசியல் களம் அனலடித்து கொண்டிருக்கிறது.

பஸ் எண்ணிக்கை அதிகமாகுமா?

எது எப்படியோ, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பார்க்கும்போது, ஒரு திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றுவதால் மக்களுக்கு நேரடியாக நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுவதில்லை..

ஆனால், முந்தைய அரசின் நல்ல திட்டங்களை முடக்காமல், இத்திட்டத்தை அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த போவதாக தவெக அரசு சொல்லி உள்ளது நல்ல விஷயம்தான்.. அதேசமயம், வெறும் பெயர் மாற்றத்தோடு நின்றுவிடாமல், பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சேவையின் தரத்தை மேம்படுத்தி ஏழை மற்றும் நடுத்தரப் பெண்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் போதுதான் இத்தகைய மாற்றங்கள், உண்மையான நன்மையாக மாறும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+