"TVK" வசனம் மியூட்.. ஜனநாயகன் சென்சாரில் மொத்தம் 12 கட்கள்.. விஜய் படத்திற்கு CBFC சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படம் ஒரு வழியாக ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்த ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் இப்போது படத்திற்குக் கிடைத்துள்ளது. இதற்கிடையே இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே படத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள சென்சார் கட்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக ஜனநாயகன் இருந்தது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இதற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதலில் இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த படம், அப்போது திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. சென்சாரில் ஏற்பட்ட சிக்கலே அதற்குக் காரணமாக இருந்தது.

Vijay Jana Nayagan censor TVK

என்ன பிரச்சனை

முதலில் படத்தை பார்த்த சென்சார் குழுவில் இருந்த உறுப்பினர் ஒருவர் அட்சேபனம் தெரிவித்துள்ளார். இதனால் சென்சார் பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குப் போய் வரவே மேலும் காலதாமதம் ஏற்பட்டது. எல்லா பஞ்சாயத்தும் இப்போது தான் முடிந்துள்ள நிலையில், ஒரு வழியாக ஜனநாயகன் படத்திற்கு இப்போது தான் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. நேற்று ஜூலை 9ஆம் தேதி சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் எனவும் தணிக்கை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம் வெளியாகும் முன் 12 முக்கிய கட்களை செய்ய வேண்டும் என தணிக்கைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

மியூட்

அதன்படி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இடம்பெற்றுள்ள புத்தக அட்டைப்படக் காட்சி மாற்றப்பட்டுள்ளது. மேலும், "அம்பேத்கர்... முதல்... டிவிகே சட்டம்" என்ற வசனம் மாற்றப்பட்டுள்ளது. "TVK" என்ற வார்த்தை இடம் பெற்றுள்ள காட்சிகளில், அது மியூட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு காட்சியில் இடம் பெற்றிருந்த தேசியக் கொடி தொடர்பான காட்சிகளை நீக்கவும் தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், "பாகவதன்", "ரங்கநாதர்" உள்ளிட்ட சில வார்த்தைகள் மற்றும் சில கெட்ட வார்த்தைகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனநாயகன் படத்தில் 'ஆபரேஷன் மெலுகா' என்று மிஷன் தொடர்பாக விளக்கும் காட்சியில் இடம் பெற்றிருந்த "ஓம்" என்ற வார்த்தையை நீக்கவும், அதே காட்சியில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைக் குறிக்கும் வசனத்தையும் மாற்ற அல்லது மியூட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக அடையாளச் சின்னம் மரியாதையற்ற முறையில் காட்சிப்படுத்தப்பட்டதையும் மாற்றுமாறு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. மற்றொரு வசனத்தையும் முழுமையாக மியூட் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

ரன்னிங் டைம்

"இந்த நாட்டை என் கால்ல விழ வைக்கிறேன்" என்ற வசனமும் மியூட் செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தை எரிக்கப்படும் காட்சி நீக்கப்பட்டு மாற்று காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல "சிலுவையில்" என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 20 நொடிகள் நீக்கப்பட்டும், 10 நொடிகள் மாற்றப்பட்டும் இருந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த ரன்னிங் டைமில் மாற்றம் இல்லை. 183 நிமிடங்கள் 11 வினாடிகள் என்ற அதே ரன்னிங் டைமில் தான் சென்சார் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஜனநாயகன்

ஹெச். வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட ரிலீஸுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்ததே சென்சார் சான்றிதழ் தான். இப்போது அதுவும் கிடைத்துவிட்ட நிலையில், இம்மாத இறுதியில் படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. இருப்பினும், படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+